சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கமல் பாக்காத தோல்வியா.? கங்குவா சூர்யாவுக்கு அமீரின் கேள்வி

Kanguva: சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் கங்குவா கடந்த மாதம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் கடும் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது.

இதற்கு எதிராக தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி தியேட்டருக்கு சில விதிமுறைகளை விதித்தனார். அதன்படி மீடியாக்கள் பொதுமக்கள் கருத்துக்களை கேட்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் நன்றாக இருக்கும் சிறு பட்ஜெட் படங்கள் கூட வெளியில் தெரியாமல் போய்விட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு ஒரு பக்கம் எழுந்தது.

இந்நிலையில் இயக்குனர் அமீர் இது குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது ஒரு பொருள் சந்தைக்கு வந்து விட்டால் இது போன்ற விஷயங்களை சந்தித்துதான் ஆக வேண்டும்.

படத்தை மக்களின் பார்வைக்கு கொடுத்துவிட்டு விமர்சனம் செய்யக்கூடாது என்று சொன்னால் எப்படி. கங்குவா படத்திற்காக சூர்யா கடுமையாக உழைத்திருக்கிறார்.

சூர்யாவுக்கு அமீரின் கேள்வி

தயாரிப்பாளரும் அதிக செலவு செய்திருக்கிறார். ஆனால் இது போன்ற படங்களுக்கு சில நேரம் பலன் கிடைக்கும் சில நேரம் கிடைக்காமல் போகும்.

அதற்காக மற்றவர்களை குறை சொல்லக்கூடாது. இதற்கு உதாரணமே கமல்தான் அவருடைய குணா ஆளவந்தான் ஹேராம் போன்ற படங்கள் வெளிவந்த போது வரவேற்பு பெறவில்லை.

அதற்காக கமல் கடுமையான உழைப்பை கொடுத்திருந்தார்.. இருந்தபோதிலும் இந்த தோல்வியை அவர் பொருட்டாக நினைக்காமல் அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.

அப்படித்தான் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ப்ரமோஷனுக்கு பத்திரிக்கையாளர்களை கூப்பிடுகிறீர்கள். ஆனால் விமர்சனம் செய்யக்கூடாது என்று சொன்னால் எப்படி என அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News