வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

25 லட்சத்தை ஆட்டைய போட்ட பாலா.. நம்பி நாசமா போன தயாரிப்பாளர்

இயக்குனர் பாலாவும், பிரச்சனையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று சொன்னால் ரொம்பவும் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு அவரை சுற்றி எப்போதும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் சமீப காலமாக அவர் குறித்து வெளிவரும் பல செய்திகள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிய சம்பவமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அந்த படப்பிடிப்பில் அவர் நடந்து கொண்ட முறையை வைத்து அவருடைய கேரியர் அவ்வளவுதான் என்று ரீதியில் பேசப்பட்டது. இருந்தாலும் பாலா அந்த படத்தை முடித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

Also read: 3 வயது கம்மியாக சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த இளம் நடிகை.. நல்ல வேல படம் சூப்பர் ஹிட்

இந்நிலையில் இவரால் ஏமாந்து போன தயாரிப்பாளர் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 20 வருடங்களுக்கு முன்பு பாலாவின் இயக்கத்தில் விக்ரம், சூர்யா, லைலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிதாமகன். இப்படத்தை வி ஏ துரை தயாரித்திருந்தார்.

இதையடுத்து அவர் சில திரைப்படங்களை தயாரித்து இருந்தாலும் பெரிய அளவில் அவரால் லாபம் பார்க்க முடியவில்லை. தற்போது சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு வரும் அவர் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அது குறித்து வெளியான தகவல் பலரையும் பரிதாபப்பட வைத்தது.

Also read: மும்பையில் செட்டிலான சூர்யா குடும்பம்.. பிரித்விராஜுடன் நடந்த திடீர் சந்திப்பின் காரணம்

இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் சூர்யா உடனே அவருக்கான பண உதவியை செய்திருக்கிறார். இந்நிலையில் பாலா அவரிடம் சில வருடங்களுக்கு முன்பு புது படம் ஒன்றை இயக்கி தருவதாக 25 லட்சம் ரூபாயை வாங்கி இருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வராமல் இருந்திருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார். உடனே பாலா அந்த பணம் நீங்கள் எனக்கு பிதாமகன் படத்திற்காக கொடுக்க வேண்டிய பாக்கி என்று கூறி இருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன துரை செய்வதறியாது தவித்திருக்கிறார். தற்போது இந்த உண்மையை உடைத்திருக்கும் அவர் சினிமாவை பொருத்தவரை நான் யாருக்கும் பணம் தர வேண்டியது இல்லை. ஆனால் பாலா தான் என்னை ஏமாற்றி விட்டார் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இப்படி நம்பி மோசம் போய் மருத்துவ செலவுக்காக தவிக்கும் தயாரிப்பாளரை நினைத்தால் வேதனையாக தான் இருக்கிறது. மேலும் இப்படி காசை ஆட்டைய போட்ட பாலாவுக்கு எதிராக சில விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

Also read: தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் பாலா.. ஆர்யாவை தொடர்ந்து மாட்டிக் கொண்ட சூர்யா

Trending News