செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

18 வருடம் கழித்து மனைவியை விவாகரத்து செய்த பாலா.. காரணம் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

தமிழ் சினிமாவில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தரக்கூடிய பல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக திரை பிரபலங்களின் விவாகரத்து சம்பவங்கள் சமீப நாட்களில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அண்மையில் நாக சைதன்யா-சமந்தா ஜோடி, தனுஷ்-ஐஸ்வர்யா தனுஷ் ஜோடி என்று இந்த விவாகரத்து சர்ச்சைகள் சமீப காலத்தில் மிக அதிக பேசு பொருளாக மாறியது.

இப்படி இருக்கக்கூடிய சமயத்தில் தற்போது எவரும் எதிர்பாராத விதத்தில் இயக்குனர் பாலா அவர்கள் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக தகவல் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகத்தையும் அதிர வைத்திருக்கிறது. கடந்த 2004ஆம் ஆண்டு முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் பாலா. இவர்களுக்கு பிராத்தனா என்ற மகன் இருக்கின்றார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக திருமண வாழ்வில் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இவர்களுக்குள் அடிக்கடி சண்டை, பல நேரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் கடந்த 4 ஆண்டுகளாக அந்த கருத்து வேறுபாடு அதிகரித்து, இவர்களுக்கிடையே விரிசல் மேலும் அதிகமாகி இருக்கிறது. இதனால் மனதளவில் இருவருக்குள்ளும் ஒத்துப்போகாமல் பிரிந்து தான் வாழ்ந்து வந்துள்ளனர்.

இத்தனை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து இருந்தாலும் இவர்களுக்கு இடையேயான உரசல் அதிகமாகவும் இனி ஒன்றாக வாழ முடியாது என நினைத்து இந்த முடிவை எடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வெகு நாட்கள் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தாலும் மனதளவில் பிரிந்து தான் வாழ்ந்து வந்து இருக்கின்றனர். இப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் சுமூகமாக பேசி விவாகரத்து எனும் முடிவை எடுத்து விவாகரத்து பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இருக்கக்கூடிய இயக்குனர் பாலா அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

சமீப காலமாக சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து என்பது ஒரு தொடர்கதையாக மாறி வருகிறது. இசையமைப்பாளர் டி. இமான் ஆரம்பித்து அடுத்தடுத்து பல பிரபலங்கள் இந்த விவாகரத்து முடிவை எடுத்து பிரிந்து சென்று இருக்கின்றனர். பாலாவின் இந்த விவாகரத்து விவகாரத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு தான் காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Trending News