ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பாரதிராஜா வெளிநாட்டில் எடுத்த இரண்டே படங்கள்.. கிராமத்தானையும் விட்டுவைக்காத வெளிநாட்டு மோகம்

Director Bharathiraja: உணர்வு பூர்வமாக திரைப்படங்கள் எடுப்பதில் வல்லவராக இருப்பவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளர். இவர் திரைப்படங்கள் பெரும்பாலும் கிராமப்புறம் சார்ந்த கதையாகவே இருக்கும். ஆனால் அப்படிப்பட்டவரையும் வெளிநாட்டு மோகம் கண்ணை மறைத்து, அதனாலயே 2 படங்கள் வெளிநாட்டில் எடுத்திக்கிறார், அது என்ன என்று பாப்போம்.

அப்பொதெல்லாம் பாரதிராஜாவுக்கு என்றே ஒரு தனி ட்ரெண்ட் உள்ளது. ரசிகர்களையே தனது படங்களின் மூலம் தன் கையில் வைத்திருந்தவர். இவரின் கிராமப்புற கதைகளை ரசிப்பதற்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். எப்பொழுதுமே இவரின் படங்கள் என்றால் ஏதாவது வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் இருக்கும். இதற்காகவே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகவே திரையரங்குகளுக்கு செல்வார்கள்.

Also Read: மணிரத்தினத்திடம் எடுபடாமல் போன சிம்புவின் சில்மிஷங்கள்.. பாம்பு புற்றிலே மகுடி வாசிச்சாலும் வேலைக்காகல

16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில் ,மண்வாசனை, முதல் மரியாதை, என்று எக்கச்சக்க திரைப்படங்கள் உள்ளன இவரின் பெருமையை சொல்லுவதற்கு. கிராமப்புற சூழலையே படமாக எடுத்துக் கொண்டிருந்தவர், திடீரென வெளிநாட்டு சூழல் மீதும் மோகம் கொண்டு, 2 படங்கள் மட்டுமே வெளிநாட்டு பாணியில் எடுத்துள்ளார்.

இவரின் படைப்புகளில் வெளியான திரைப்படங்கள் மொத்தம் 43 ஆகும். இது மட்டுமில்லாமல் இவர் நடிகராகவும், திரையுலகில் அமோகமாக வலம் வந்துள்ளார். 80களின் தொடக்கத்திலிருந்து தற்போது வாத்தி திரைப்படம் வரை நடித்துள்ளார். அப்போது இருந்த இயக்குனர்களுக்கு சவாலாக இருந்தவர். அப்படிப்பட்ட இவர் இரண்டே படங்கள் மட்டும் வெளிநாட்டில் இயக்கியுள்ளார்.

Also Read: நடிச்சா பணம் தர மாட்டாங்க, மரியாதை கொடுக்க மாட்டாங்க.. கடுப்பாகி சினிமாவை விட்டு விலகிய தனுஷின் நண்பர்

பொம்மலாட்டம்: ஆக்சன் கிங் அர்ஜுன், ரஞ்சிதா, மணிவண்ணன், விவேக் போன்றவர்கள் இணைந்து நடித்து 2008ல் வெளிவந்த திரைப்படம் தான் பொம்மலாட்டம். இத்திரைப்படம் ஆக்சன் திரில்லர் கலந்த சக மனிதரின் உணர்வையும் வெளிக்கொண்டுவரும் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் தமிழில் பயங்கரமாக பட்டையை கிளப்பியது, அதனை தொடர்ந்து ஹிந்தியிலும் பைனல் கட் ஆப் டைரக்டர் என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

கண்களால் கைது செய்: வசீகரன், பிரியாமணி, ஆகாஷ், சானட் போன்றோர் நடித்து 2004ல் வெளிவந்த திரைப்படம் கண்களால் காதல் செய். இது ஒரு இசை சார்ந்த ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் ஆகும். திரைப்படத்தின் காட்சிகள் ஸ்ரீலங்கா, ஊட்டி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு வரவேற்பு ஏதும் கெடைக்கவில்லை, போதிய வசூலும் கிடைக்கவில்லை அதனால் பிளாப்பானது.

Also Read : லியோ சென்சாரில் தப்பித்தாலும் அவன்ட உங்க பருப்பு வேகாது.. தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட லோகேஷ்

Trending News