சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நொண்டி குதிரைக்கு சாக்கு சொன்ன இயக்குனர்.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்

இயக்குனரை நம்பி பிரபல தயாரிப்பு நிறுவனம் பெரிய பட்ஜெட் போட்டு ஒரு படத்தை எடுத்தது. எப்படியும் இந்த படத்தின் மூலம் பல கோடிகள் லாபத்தை அள்ளிவிடலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு நேர் எதிராக படம் படுதோல்வி அடைந்து மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்துள்ளது.

இதற்கெல்லாம் காரணம் இயக்குனர் தான் என்று தயாரிப்பு நிறுவனத்தில் கூறப்படுகிறது. ஒருபுறம் படத்தின் கதை சுமார் தான் என்றும் இதில் அவருடைய ஈடுபாடு அதிகம் இல்லை என்பதையும் கூறியுள்ளனர். போதாக்குறைக்கு படத்திற்கு வைத்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேசியது சர்ச்சை இருந்தது.

இது படத்திற்கு ப்ரமோஷனாக அமையும் என்ற எதிர்பார்த்த நிலையில், இதுவே பின்னடைவை சந்திக்கும்படி அமைந்துள்ளது. இதனால் தான் படம் வெற்றி பெறவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் மீது குறை சொல்லி இருக்கிறார்கள்.

Also Read : கடுப்பில் போனை கட் செய்த ஹீரோ.. விரத்தியில் கிரஷ் நடிகை

ஆனால் இயக்குனரோ படம் தோல்வியானதற்கு தயாரிப்பு நிறுவனம் தான் காரணம் என்று நொண்டிக் குதிரைக்கு சறுக்கியதே சாக்கு என்பது போல கூறி இருக்கிறார். அதாவது இந்த படத்திற்கு சரியான ப்ரமோஷன் செய்யாத காரணத்தினால் தான் படம் தோல்வியை சந்தித்துள்ளது எனப் பிளேட்டை திருப்பி போட்டு இருக்கிறார்.

இவ்வாறு ஒருவருக்கொருவர் குறை சொல்லி வரும் நிலையில் படம் இப்போது பிளாப்பானது தான் மிச்சம். இதனால் இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்புகள் வருவது சந்தேகம் தான். மேலும் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்து தலையில் துண்டை போட்டிருக்கிறது.

Also Read : பொட்டி பாம்பாய் அடங்கிய ஹீரோ.. காரியத்தை சாதித்துக் கொண்ட மனைவி

Trending News