காலம் காலமாக சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இருந்தாலும் இப்போதுள்ள ஹீரோயின்கள் இதை அதிகமாகவே அனுபவித்து வருகின்றனர். சிலர் வாய்ப்புக்காக இதற்கு சம்பாதித்தாலும் பல ஹீரோயின்கள் இப்படிப்பட்ட அசிங்கங்களுக்கு சம்மதிப்பது கிடையாது. அதனால் சில நடிகைகள் பட வாய்ப்புகளையும் இழந்து இருக்கின்றனர்.
மேலும் சில நடிகைகள் சொல்ல முடியாத அவமானங்களுக்கு ஆளாகின்றனர். அப்படித்தான் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த ஒரு நடிகைக்கு படுமோசமான அனுபவம் நேர்ந்திருக்கிறது. சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் தங்கையாக பல திரைப்படங்களில் நடித்தவர்தான் அந்த நடிகை. அதன் பிறகு காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார்.
Also read: அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததால் பலான கேசில் மாட்டிய நடிகை.. ஹீரோயின் மார்க்கெட்டை காலி செய்த நடிகர்
அப்போது ஒரு காமெடி நடிகருடன் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பட சூட்டிங்கின் போது இயக்குனர் இவரை அட்ஜஸ்ட்மென்ட் செய்யும்படி கேட்டு இருக்கிறார். இது போன்ற விஷயங்களை ஏற்காத அந்த நடிகை இயக்குனரிடம் முடியாது என்று கராராக பேசியிருக்கிறார். தன்னை அவமானப்படுத்திய நடிகையை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று திட்டம் போட்ட இயக்குனர் பல டார்ச்சர்களை அவருக்கு கொடுத்திருக்கிறார்.
அதாவது அவர் நன்றாக நடித்தாலும் பலரின் முன் திட்டுவது, நடிகை நடிக்கும் போது மட்டும் அதிக வெளிச்சம் உள்ள லைட்டுகளை வைப்பது என்று கொடூரமாக நடந்திருக்கிறார். இதனால் அந்த நடிகைக்கு உடலளவிலும், மனதளவிலும் பல பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இயக்குனர் படுமோசமான வார்த்தைகளால் அவரை திட்டி இருக்கிறார்.
இந்த அவமானத்தால் கூனி குறுகிப் போன அந்த நடிகை சினிமாவையே வெறுத்து ஒதுங்கும் அளவுக்கு சென்றிருக்கிறார். ஆனாலும் பேசியபடி அந்த படத்தை முடித்துவிட்டு தான் அவர் வெளியேறியிருக்கிறார். அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என்று முடிவு எடுத்த அந்த நடிகை இப்போது சின்னத்திரையில் நல்ல நல்ல கதாபாத்திரங்களை செய்து கொண்டிருக்கிறார்.