திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

செதுக்கி செதுக்கி சின்னாபின்னமான படம்.. ஓவர் பர்பெக்சன் பார்த்து சண்டை போடும் இயக்குனர்

ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் அந்த பிரபல இயக்குனர். பேய் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் கில்லாடியான இவர் இயக்கத்தில் வெளிவந்த அந்த ஹாரர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து இவர் தற்போது பிரபல நடிகை ஒருவரை வைத்து ஒரு திகில் திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். முந்தைய படத்தைப் போலவே இந்த படமும் நன்றாக வர வேண்டும் என்று அவர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறாராம்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தை எப்படியாவது சூப்பர் ஹிட் படம் ஆக்கி விட வேண்டும் என்பதற்காக அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வேலை பார்த்து வருகிறாராம். இதனால் படம் முடிய வேண்டிய நேரத்தில் முடியாமல் இழுத்து கொண்டே போகிறது.

மேலும் படத்தில் வேலை செய்த டெக்னீசியன்கள் எல்லாம் இந்த படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இயக்குனர் இப்படி காலத்தை நீட்டிக்கொண்டே போவதால் பட குழுவினர் அனைவரும் நொந்து நூடுல்ஸ் ஆன நிலைமையில் இருக்கிறார்களாம்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக இந்த படத்தில் மிகவும் துணிச்சலாக நடித்திருக்கும் அந்த நடிகை இதைத்தான் மிகவும் நம்பி கொண்டிருக்கிறாராம். அந்த நம்பிக்கையில் அவர் தற்போது தன்னுடைய சம்பளத்தையும் ஏற்றி விட்டார். படமே இன்னும் ரிலீஸ் ஆகவில்லை, அதை நம்பி இந்த நடிகை வேறு இப்படி பண்ணுகிறாரே என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தற்போது புலம்பி வருகின்றனர்.

Trending News