திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பழைய பாக்யராஜ், பாண்டியராஜனை கண்முன் கொண்டுவந்த இயக்குனர்.. இளசுகளுக்கு வைத்த ஆப்பு

பாக்யராஜ், பாண்டியராஜன் இருவரின் படங்களை இன்று பார்த்தாலும் ரசிக்கும்படி இருக்கும். அதே பாணியில் ஒரு இளம் இயக்குனர் உருவாகி வருகிறார். சமீபத்தில் அவர் எடுத்த ஒரு கதை இளசுகளை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. படத்தில் இன்றைய நடைமுறை வாழ்க்கையை தத்ரூபமாக எடுத்திருக்கிறார். இதற்கு முன்னர் அவர் எடுத்த குறும்படத்தை இப்பொழுது வெள்ளித்திரையில் படமாக ரிலீஸ் செய்ய உள்ளார்.

Also Read : பார்த்திபன், பாண்டியராஜன் என வளர்த்து விட்ட பாக்யராஜ்.. ஒருவருக்கு மட்டும் நடந்த துரதிர்ஷ்டம்

டைரக்டர் பிரதீப் ரங்கனதன் சமீபத்தில் எடுத்து முடித்து இருக்கும் படம் லவ் டுடே. அவரே இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி கலக்கி வருகிறது. கதைப்படி காதலிக்கும் இளசுகள் இரண்டு பேரின் உண்மையான சுயரூபத்தை வெளியில் தெரியும்படி காட்டியிருக்கிறார்.

இந்த படத்தில் சத்யராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார் போன்றவர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தில் வரும் கதைப்படி சத்யராஜ் லவ் பண்ணும் ஹீரோ-ஹீரோயின் மொபைல் போன்களை இருவருக்குள்ளும் மாற்றிக்கொள்ள செய்கிறார். அப்படி மாற்றிக்கொள்ளபட்ட போன்களில் வரும் பர்சனலான விஷயங்கள் தான் கதை.

Also Read : மதிக்காத இளையராஜாவிடம் பாக்யராஜ் பண்ணிய தாஜா.. உச்சகட்ட பொறாமையில் இசை ஞானி

ட்ரைலரை பார்க்கும் பொழுதே அவ்வளவு சிரிப்பு. இளசுகள் அனைவரும் மிகவும் என்ஜாய் பண்ணி பார்க்கிறார்கள். அனேகமாக இது அவர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக அமையும். இதற்கு முன்னர் பிரதீப் ரங்கநாதன் எடுத்தப்படம் கோமாளி. அந்தப்படமும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்கட்டும் ஆனால் இப்படி மொபைல் போனை மாற்றிக் கொள்வது என்பது இன்றைய இளசுகளுக்கு ஆபத்தில் முடியும். செக்யூரிட்டி கோடு இல்லாத மொபைல் போன்களை இப்பொழுது பார்க்கவே முடியவில்லை. அவ்வளவு சிக்கலான விஷயங்கள் அதில் இருக்கிறது.

Also read : பாக்கியராஜ் கொடுத்த வாய்ப்பு.. சீரியல் மூலம் தன்னை நிரூபித்த ராஜு பாய்

Trending News