ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தளபதி 69 அரசியல் படமா.? மேடையில் போட்டு உடைத்த எச்.வினோத், 200% இப்படி தான் இருக்கும்

Thalapathy 69: விஜய்யின் அரசியல் பயணம் ஆரம்பித்துவிட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள கோட் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வருகிறது. அதை அடுத்து அவருடைய 69 ஆவது படத்தோடு சினிமாவிற்கு குட்பை சொல்ல இருக்கிறார்.

மக்கள் பணிகளுக்காக இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருப்பது வரவேற்கப்பட்டாலும் தளபதியின் ரசிகர்கள் கவலையோடு இருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் அவருடைய கடைசி படம் எப்படி இருக்கும்? யார் இயக்குனர்? என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் பல இயக்குனர்களின் பெயர் பரிசீலனையில் இருந்தாலும் எச் வினோத் தான் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் கசிந்தது. ஆனால் தற்போது தளபதி 69 இயக்குனர் நான்தான் என மேடையில் உறுதி செய்துள்ளார் எச் வினோத்.

மேடையில் உறுதி செய்த எச் வினோத்

அதன்படி இப்படம் 200% தளபதியின் படமாக தான் இருக்கும். அவர் அரசியலுக்கு வரப்போவதால் இப்படம் அந்த மாதிரி கதைக்களத்தை தான் கொண்டிருக்கும் என பேசுகிறார்கள். ஆனால் அப்படி கிடையாது.

இது முழுக்க முழுக்க கமர்சியல் படம். என் படத்தை எல்லா வயதினரும் பார்க்கிறார்கள். அதனால் அதற்கேற்றவாறு இருக்க வேண்டும் என விஜய் கூறினார். அதனால் தளபதி 69 விஜய் படமாக மட்டுமே இருக்கும் என வினோத் கூறி இருக்கிறார்.

இதுதான் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய்யின் கடைசி பட இயக்குனர் தரமான ஆளாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்றவாறு தற்போது வினோத் மாஸ் அப்டேட் கொடுத்து தளபதியின் கடைசி இயக்குனர் நான்தான் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

சோசியல் மீடியாவில் வைரலாகும் தளபதி 69 மாஸ் அப்டேட்

Trending News