ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அரைத்த மாவையே அரைத்துக் பிரஷ்ஷாக கொடுத்த ஹரி.. யானை படத்தில் சொதப்பிய விஷயங்கள்

20 வருடங்களாக தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை மட்டுமே இயக்கி கொண்டிருக்கும் ஹரி உடைய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். அதுவும் குடும்ப சென்டிமென்ட் படங்களை எடுப்பதில் கில்லாடியான இயக்குனர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் யானை திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

இன்னிலையில் பல தடைகளை தாண்டி ரிலீஸாகி இருக்கும் யானை படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓரளவே மட்டும் பூர்த்தி செய்ததால், இந்தப்படத்தில் ஹரி சொதப்பிய விஷயங்களை ரசிகர்கள் பட்டியல் போட்டுக் காட்டுகின்றனர். அவருடைய பழைய படங்களின் நல்ல நல்ல காட்சிகளை மொத்தமாக சேர்த்து யானை படத்தில் காட்டியுள்ளார்.

அதாவது யானை படத்தில் ஏற்கனவே ஹரி இயக்கத்தில் வெளியான வேல், வேங்கை, கோவில் போன்ற படங்களின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது. இதனால் பழைய காட்சிகள் அனைத்தும் கண்முன்னே வந்து சென்றது. அதுமட்டுமின்றி படத்தின் காமெடி காட்சிகள் சில இடங்களில் சொதப்பி இருக்கின்றனர்.

பெரும்பாலான திரைப்படங்களில் அருண் விஜய்யை போலீஸ் அல்லது நகரத்து இளைஞன் வேடத்தில் பார்த்துவிட்டு தற்போது முழுக்க முழுக்க கிராமத்து இளைஞராக யானை படத்தில் நடித்திருக்கும் அருண் விஜய்க்கு, பிரிய பவனி சங்கர் உடனான ரோமன்ஸ் செட்டாகவில்லை.

யாரும் சாகக் கூடாது என்ற நினைப்பில் கடைசிவரை திரைக்கதையில் இயக்குனர் ஹரி சொதப்பி உள்ளார். சென்டிமென்ட் படம் என்பதால் இந்த விஷயத்தை கவனமாக கையாண்டிருக்கும் ஹரி ரசிகர்கள் தரப்பிலிருந்து யோசிக்க மறந்து விட்டார்.

ஆக மொத்தம் அருண் விஜயின் கம்பீரம், ஹரியின் வசனங்கள் பிரமாதம் மத்தபடி ஜாதி, மதம், குடும்ப பாசம் என கிராமத்து மக்களை மட்டுமே தற்போது திரையில் ஓடிக் கொண்டிருக்கும் ஹரியின் யானை திரைப்படம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News