வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹரி விளையாடி தெறிக்கவிட்ட 5 படங்கள்.. முக்கிட்டு எடுத்த 3வது பார்ட் என்னாச்சு தெரியுமா?

இயக்குனர் ஹரி 2002 ஆம் ஆண்டு ரிலீசான ‘தமிழ்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர். இந்த படத்தில் சிம்ரன், பிரஷாந்த், வடிவேலு, ஊர்வசி நடித்திருந்தனர். இவர் அதிரடி மசாலா திரைப்படங்களுக்கு பேர் போனவர். இவருடைய எல்லா படங்களின் சண்டை காட்சிகளிலும் நிச்சயமாக வாகனங்கள் அடித்து நொறுக்கப்படும். எந்த அளவுக்கு சண்டை காட்சிகள் இருக்கிறதோ அந்த அளவுக்கு நகைச்சுவையிலும் கவனம் செலுத்துவார்.

சாமி: 2003 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் சாமி. இதுவரை வந்த போலீஸ் படங்களிலேயே ரொம்பவும் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. இந்த படத்தில் விக்ரம், த்ரிஷா, விவேக், கோட்டா ஸ்ரீனிவாச ராவ், மனோரமா, விஜயகுமார் நடித்திருந்தனர். இந்த படத்தில் விக்ரம் இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடும் காட்சி எல்லாம் தியேட்டர் அப்லாஸ் பெற்றவை. சாமி 2 எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்பதால் பல வருடம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

Also Read: கோப்ரா பட தோல்வியால் அஜய் ஞானமுத்துக்கு ஏற்பட்ட சிக்கல்.. பின்வாங்கி அடுத்த பட டாப் ஹீரோ

ஐயா: 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தில் தான் நயன்தாரா கோலிவுட்டிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நெப்போலியன், பிரகாஷ் ராஜ், லட்சுமி, ரோகிணி, சார்லி நடித்திருந்தனர்.

சிங்கம்: ஹரி படத்திலேயே மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படம் என்றால் அது சிங்கம் தான். சூர்யா, அனுஷ்கா, விவேக், ராதாரவி, பிரகாஷ் ராஜ், விஜயகுமார் நடித்திருந்தனர். காக்க காக்க படத்தில் சைலெண்டானா போலீசாக வந்த சூர்யா இந்த படத்தில் கர்ஜித்து இருப்பார். இதன் வெற்றியை தொடர்ந்து அடுத்து 2 பார்ட்டுகள் வந்தன. சிங்கம் 2 சிங்கம் 3 என வரிசைகட்டி படத்தை இறக்கி விட்டார் ஆனால் எதிர்பார்த்த வெற்றி முதல் பாகம் அளவுக்கு கிடைக்கவில்லை.

Also Read: அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த சூர்யா.. மாறா ஜெயிச்சுரு அவ்வளவுதான்

பூஜை: 2014 ஆம் ஆண்டு வெளியான படம் பூஜை. இந்த படத்தில் விஷால், சுருதி ஹாசன், சூரி, ராதிகா, சத்யராஜ் இந்த படத்தில் நடித்திருந்தனர். தாமிரபரணி திரைப்படத்திற்கு பிறகு விஷாலுக்கு கிடைத்த தரமான படம் என்றால் அது பூஜை தான்.

யானை: அருண் விஜயின் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் ரிலீசான படம் யானை. இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், புகழ், கங்கை அமரன் போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த படம் அதிரடி ஆக்சன் நிறைந்த குடும்ப திரைப்படம் ஆகும்.

Also Read: விஷாலின் குடுமியை பிடித்து ஆட்டிய நீதிமன்றம்.. அதிரடி உத்தரவை போட்ட நீதிபதி

Trending News