Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், கடந்த இரண்டு நாட்களாக விகா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது விஜய் மற்றும் காவிரியின் காட்சிகள் தான். அந்த வகையில் இரண்டு பேருடைய மனசிலும் என்ன இருக்கிறது என்று ஒட்டு மொத்தமாக பேசி கொட்டி தீர்த்து விட்டார்கள்.
இனி யார் நினைத்தாலும் இவர்களை பிரிக்க முடியாது என்பதற்கு ஏற்ப விஜய் அவருடைய காதலை காவிரிக்கு புரிய வைத்துவிட்டார். காவிரிக்கும் விஜய் மீது தான் காதல் இருக்கிறது என்பதை விஜயும் புரிந்து கொண்ட நிலையில் இனி சாரதாவை சமாதானப்படுத்தும் விதமாக கதைகள் நகரப் போகிறது.
ஆனால் இதில் தான் இயக்குனர் ஒரு சம்பவத்தை செய்யப் போகிறார். அதாவது இதுவரை கல்யாண முடிந்த பிறகு விஜய் மற்றும் காவிரியின் காதல் ட்ராக்கை கொண்டு வந்த இயக்குனர் இனி புதுசாக இவர்கள் இரண்டு பேரும் காதலித்து மனதார கல்யாணம் பண்ணும் விதமாக கதை அமையப் போகிறது.
இதனால் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக மகாநதி சீரியலில் தரமான சம்பவம் காத்துக்கொண்டிருக்கிறது. இனி ஒவ்வொரு நாளும் விஜய் மற்றும் காவிரியின் காதல் டிராக் ஆரம்பமாகப் போகிறது. இதில் யாருடைய காதல் பெருசு என்பதற்கு ஏற்ப காதலை அள்ளி வீசப் போகிறார்கள்.
சும்மாவே காதல் மன்னனாக விஜய் புகுந்து விளையாடுவார், இனி இரண்டு பேரும் சேர்ந்து லீலைகளை ஆரம்பிக்கும் விதமாக காதல் பண்ணி அதன் மூலம் பெற்றவர்கள் சம்மதத்துடன் கல்யாணத்தை பண்ணுவதற்கு தயாராகி விட்டார்கள்.