திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

குஷ்பூவுக்காக மாற்றப்பட்ட கதை, வம்படியாக உள்ளே வந்த மீனா.. நாட்டாமை படத்தின் சுவாரஸ்யத்தை பகிர்ந்த இயக்குனர்

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் பேவரைட் திரைப்படமாக இருப்பது நாட்டாமை தான். இன்றைய தேதி வரை இந்த படத்தை தொலைக்காட்சிகளில் போட்டால் டிஆர்பி எகிறிவிடும். அந்த அளவுக்கு ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது இந்த திரைப்படம். மேலும் பல நகைச்சுவை மீம்ஸ்களுக்கு இன்றுவரை இந்த படத்தின் காட்சிகளை பயன்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

1994 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் முன்னணி ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் நாட்டாமை. இந்த படத்தை தமிழில் நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தெலுங்கில் பெத்தராய்டு என்னும் பெயரில் ரீமேக் ஆகும்போது அவரே விரும்பி விஜயகுமார் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

Also Read:2வது திருமணத்தை குறித்து முதல் முதலாக வாய் திறந்த மீனா.. மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு

சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்திருந்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகி தேர்வு என்பதே திட்டமிடாமல் நடந்ததுதானாம். நடிகை லட்சுமி குஷ்பு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தாராம் இயக்குனர். ரவிக்குமார் எதேர்ச்சையாக ஒரு படபிடிப்பு தளத்தில் குஷ்பூவை பார்க்கும் பொழுது அவர் இந்த படத்தின் கதையை கேட்டு நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னாராம்.

இதை தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியிடம் சொல்ல அவரும் ஒப்புக்கொண்டாராம். குஷ்பூ அந்த நேரத்தில் முன்னணி நடிகையாக இருந்ததால், அவருக்காக தான் அந்த ஃப்ளாஷ் பேக் காட்சியில் பெண் பார்க்கும் சீன் மற்றும் ‘கொட்டா பாக்கு’ பாடலும் சேர்க்கப்பட்டதாம். அதேபோல் மற்றொரு கதாநாயகியாக மீனாவை நடிக்க வைக்க முதலில் திட்டமே இல்லையாம். இதற்கு காரணம் படத்தின் பட்ஜெட்.

Also Read:மீனாவின் அம்மாவால் அவமானப்படுத்தப்பட்ட அஜித்.. பெரிய மனுஷன் என நிரூபித்த AK

இந்த படத்தில் விஜயகுமார் இருந்ததால் அவருடைய மனைவி மஞ்சுளா விஜயகுமார் மீனாவை நடிக்க வைப்பதற்கு ரொம்பவும் சிபாரிசு செய்தாராம். லோ பட்ஜெட் படம் என்பதால் யோசித்த ரவிக்குமார் பிறகு மீனாவையே நடிக்க வைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த சரத்குமார் மற்றும் கவுண்டமணி இருவருக்குமே சரிசமமான சம்பளம் கொடுத்து இருக்கிறார்கள்.

படத்தின் மொத்த பட்ஜெட் 50 லட்சம் ரூபாயாம். இதில் 10 லட்சம் சரத்குமார் மற்றும் கவுண்டமணிக்கு சம்பளமாக போக மீதி இருந்த 40 லட்சத்தில் விஜயகுமார், மீனா, குஷ்பூ, சங்கவி, செந்தில், மனோரமா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு சம்பளமும் கொடுத்து படத்தையும் முடித்திருக்கிறார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவ்வளவு லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படமாக பேசப்பட்டு வருகிறது.

Also Read:சரத்குமார், மீனா இணைந்து கலக்கிய 5 படங்கள்.. நாட்டாமை தம்பி பசுபதியை மறக்க முடியுமா?

Trending News