செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

தளபதி விஜய்க்கு பெருகும் ஆதரவு.. தெலுங்கு இண்டஸ்ட்ரியை மிரட்டிய பிரபல தமிழ் இயக்குனர்

நடிகர் விஜய் மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என கடந்த தீபாவளியன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது வாரிசு திரைப்படம் ஆந்திராவில் ரிலீஸ் ஆவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது,

அதாவது ஆந்திராவில் அன்றைய தினம் மகரசங்கராந்தி என்பதால் அதுபோன்ற விழா நாட்களில் தெலுங்கு மொழி படங்களுக்கு தான் முன்னுரிமை என்றும், என்னதான் தெலுங்கு இயக்குனர் இயக்கி, தெலுங்கு தயாரிப்பாளர் தயாரித்து இருந்தாலும், வாரிசு படம் நேரடி தமிழ்ப்படம் என்பதால் அன்றைய தினத்தில் ரிலீஸ் ஆனால் தியேட்டர்கள் மிகக் குறைவாக ஒதுக்கப்படும் என்றும் முடிவெடுத்து இருக்கின்றனர்.

Also Read: விஜய்க்காக குரல் கொடுத்த அண்ணன்.. தம்பி படம் வரலைன்னா உங்க படத்தை வர விடமாட்டேன்

இந்த முடிவு இப்போது தமிழ்நாட்டில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வாரிசு ரிலீஸ் தேதியில் பிரச்சனை செய்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பலரும் பேசி வரும் நிலையில் இயக்குனர் லிங்குசாமி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதை பற்றி பற்றி ரொம்பவும் கோபமாக பேசியிருக்கிறார்.

நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு பிரச்சனை பண்ண வேண்டும் என யார் நினைத்தாலும் அந்த எண்ணத்தை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், அப்படியில்லை என்றால் நாங்கள் அதை மாற்ற வைப்போம் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த பிரச்சனையில் சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக தலையிட்டு சிக்கலை தீர்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

Also Read: நாலாபக்கமும் பிரச்சனையை சந்தித்து வரும் விஜய்யின் வாரிசு.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய தயாரிப்பாளர்

மேலும் பேசிய அவர், வாரிசு ரிலீஸ் தேதியில் பிரச்சனை ஏற்பட்டால் வாரிசுக்கு முன், வாரிசுக்கு பின் என சினிமா மாறிவிடும் அது நல்லதில்லை, விஜய் போன்ற ஒரு சூப்பர் ஸ்டார் தெலுங்கு பட தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுத்து படம் பண்ணும் போது அதை அவர்கள் ஆதரிக்க வேண்டும் எனவும், கலைக்கு மொழி இல்லை என்றும் கூறினார்.

முன்னதாக தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் KGF, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களுக்கு பெருவாய்ப்பளித்தது தமிழ்நாடு. இது விஜய் என்ற தனி நடிகருக்கு எற்படும் பிரச்சனையல்ல என்றும், வாரிசு படம் பொங்கலன்று ஆந்திராவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இனி வேறு எந்த மொழி படங்களுக்கு தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகாது என கூறியிருந்தார்.

Also Read: உள்ளூர்ல தியேட்டர் இல்ல, வெளியூரில் ஆதிக்கம் செலுத்தும் விஜய்.. துணிவை விட 3 மடங்கு வியாபாரம் செய்த வாரிசு

Advertisement Amazon Prime Banner

Trending News