வெள்ளிக்கிழமை, மார்ச் 14, 2025

39 வயதில் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் லோகேஷ்.. சூப்பர் ஸ்டார் இயக்குனரின் மொத்த சொத்து மதிப்பு

Lokesh: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தன்னுடைய 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கூலி படப்பிடிப்பில் இருக்கும் அவர் அங்கு கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதேபோல் ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம் ரஜினி ரசிகர்கள் கூலி பட அப்டேட் கேட்டு சோசியல் மீடியா ட்ரெண்டை உருவாக்கியுள்ளனர்.

இப்படி லோகேஷ் தன் பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய சொத்து மதிப்பு பற்றி இங்கு காண்போம். வெற்றி இயக்குனராக வலம் வரும் இவர் தற்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.

கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் லோகேஷ்

இதன் மூலம் வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் யூடியூபர்களுக்கும் அடையாளத்தை கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார். தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து 1000 கோடி வசூலை அடிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய நோக்கம்.

அதற்கான முயற்சியில் இருக்கும் லோகேஷ் ஒரு படத்துக்கு 40 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். அது போக விக்ரம் பட வெற்றியால் சந்தோஷமான கமல் இவருக்கு ஒரு சொகுசு காரை பரிசளித்தார்.

அதன் மதிப்பு 70 லட்சத்தை தாண்டும். அதேபோல் லோகேஷிடம் இரண்டு கோடி மதிப்புள்ள சொகுசு காரும் இருக்கிறது.

மேலும் 2 கோடி மதிப்பில் ஆடம்பர பங்களா என இவருடைய சொத்து மதிப்பு 100 கோடியாக இருக்கிறது. இப்படி கோடிகளின் அதிபதியாக இருக்கும் லோகேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

Trending News