வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இயக்குனர் மோகன் ராஜா, தளபதிக்காக ரெடி பண்ணியிருக்கும் கதை.. மீண்டும் இந்த காம்போ ஒன்னு சேருமா?

Director Mohan Raja: இயக்குனர் மோகன் ராஜா, ஜெயம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவிக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து முன்னணி ஹீரோவாக வழி வகுத்தது. அத்துடன் எப்பொழுதெல்லாம் தம்பி, கேரியரில் துவண்டு போய் இருக்கிறாரோ அப்பொழுது ஹிட் படத்தை கொடுத்து தூக்கி விடுவார்.

அப்படிப்பட்ட இவர் முதன் முதலில் விஜய்யை வைத்து 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் என்ற படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று விஜய்க்கு சராசரி வரவேற்பை வாங்கி கொடுத்தது. ஆனால் அதற்கு அடுத்து இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன், வேலைக்காரன் படங்கள் மிகப் பெரிய ஹிட் படமாக ஆனது.

Also read: மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பரத்.. ஜெயம் ரவியால் கேரியர் போச்சு என புலம்பல்

ஆனால் என்னமோ தெரியல விஜய்க்கு இவருடைய காம்பினேஷன் பொருந்தவில்லை என்றே சொல்லலாம். ஆனால் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் விஜய்க்காக டபுள் ஆக்சன் கதையை தயார் செய்து விஜய் இடம் சம்மதத்தை பெற்றிருக்கிறார். அந்த நேரத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் என்கிற படத்தின் கதையும் ஒன்றாக ஒத்து போயிருந்திருக்கிறது.

அதனால் மோகன் ராஜா விஜய் வைத்து இயக்கியிருந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பிறகு விஜய் இடம் வேறொரு படத்தை எடுப்பதற்கு எனக்கு அவகாசம் கொடுங்கள் என்று டைம் கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் மோகன் ராஜா அளித்த ஒரு பேட்டியில் விஜய்யுடன் அடுத்த படத்தை எப்படியாவது பண்ண வேண்டும் என்று நினைத்தது நடக்காமலேயே போய்விட்டது.

Also read: என் வாழ்க்கையிலே உருப்படியான படம் இதுதான்.. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் ஜெயம் ரவி போட்ட பூஜை

அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. அந்த வகையில் அவருடைய இமேஜுக்கு ஏத்த மாதிரி இன்னும் இரண்டு ஸ்கிரிப்டுகள் அவருக்காக நான் ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். கண்டிப்பாக கூடிய விரைவில் நாங்கள் இரண்டு பேரும் ஒரு ப்ராஜெக்ட்டில் இணைய போகிறோம் என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் மோகன் ராஜா படம் தனி ஒருவன் மற்றும் மற்ற ஹிட் படங்களை போல் வித்தியாசமாக இருந்தால் விஜய்க்கும் இவருக்குமான காம்பினேஷன் வெற்றியாக அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் தற்போது தனி ஒருவன் 2வில் பிஸியாக இருப்பதால் இப்படத்தை முடித்துவிட்டு, அடுத்த படம் தளபதிக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: ஒரு தயாரிப்பாளரா இந்த 5 படங்களால் தோற்றுப் போன சன் பிக்சர்ஸ்.. ரெண்டு அட்ட ப்ளாப் கொடுத்த விஜய்

Trending News