வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அனைத்து இயக்குனர்களும் கேவலமாக பேசும் மிஸ்கின்.. தற்போது ஒரு இயக்குனரை புகழ்ந்து பேசியிருக்கிறார்.!

கோலிவுட்டில் பேய்களையும் தேவதையாக காட்டிக் கொண்டிருக்கும் மிஸ்கின் எப்போதுமே மற்ற இயக்குனர்களை கேவலமாக பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார். ஆனால் இப்போது அவருடைய வழக்கத்திற்கு மாறாக பிரபல இயக்குனர் ஒருவரின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரை புகழ்ந்து பேசி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

அதாவது இயக்குனர் மிஸ்கின் அவர்கள் ராம் இயக்கம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இயக்குனர் ராம் இயக்கத்தில் தங்க மீன்கள், கற்றது தமிழ், பேரன்பு போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது நிவின் பாலி உடன் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

Also Read: உங்க வாயினா எதுனாலும் பேசுவீங்களா.. உதயநிதியை வச்சிக்கிட்டு மேடையில் கடுப்பேற்றிய மிஸ்கின்

ராம் இயக்கும் படத்தை பார்த்து பிரமித்துப்போன இயக்குனர் மிஸ்கின் அவரை கட்டிப்பிடித்து உன்னை போல் இந்தியாவில் ஒரு இயக்குனரையும் பார்த்ததில்லை என்று ராமே வெட்கப்படும் அளவிற்கு பாராட்டியுள்ளார். ராம் இயக்கம் இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார், இவர்களுடன் சூரி காமெடி கதாபாத்திரத்தில் கலக்க இருக்கிறார்.

சினிமா திரை உலகில் இயக்குனர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது என்பது அரிதான ஒன்றாகவே இருக்கும். ஒரு இயக்குனரை எந்த இயக்குனராக இருந்தாலும் கேவலமாக பேசுவார் அவர் படத்தை பார்க்கவே இல்லை என்றும் கூட அவர் முகத்திற்கு நேராகவே கூறுவார்கள்.

Also Read: ஒரே வரி கதையில் ஓகே சொன்ன சிம்பு.. இயக்குனர் மிஷ்கினிடம் ஆச்சரியப்பட்ட சம்பவம்

அதிலும் இயக்குனர் மிஸ்கின் அவர்கள் ராமை பாராட்டுவது இதுவே முதல் முறையாகும். இவர் எப்பொழுது என்ன பேசுவார் என்று யாருக்குமே தெரியாது அப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் மிஸ்கின் அவர்கள் வித்யாசமான கதை களங்களை கொடுக்கக்கூடிய இயக்குனர் ராமை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்.

மேலும் சிலர் மிஷ்கினின் இந்த வினோத மாற்றத்திற்கு பின்னால் ஏதாவது சூட்சமம் இருக்குமோ என்றும் கிசுகிசுகின்றனர். அத்துடன் மிஸ்கின் தற்போது நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால், இனிவரும் நாட்களில் ராம் இயக்கும் படங்களில் மிஸ்கினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

Also Read: ரொமான்டிக் ஹீரோவாக இருந்து வில்லனாக மாறிய 10 நடிகர்கள்.. சாக்லேட் பாய் நடிகர்களை கொடூரமாக காட்டிய மிஸ்கின்

Trending News