ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சூரி நடிப்பை கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்த மிஷ்கின்.. சர்ச்சையை கிளப்பிய கொட்டுக்காளி மேடை

Kottukkaali: நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றுள்ளார். அவருடைய அமரன் ரிலீசுக்கு தயாரான நிலையில் அவர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி வரும் 23ஆம் தேதி திரைக்கு வருகிறது.

பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. எதார்த்தமான காட்சிகளோடு உருவாகி இருக்கும் இப்படத்தின் ஸ்பெஷலே இதில் இசையமைப்பாளர் இல்லை என்பதுதான்.

கதையோடு பயணிக்கும் படியாக தான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் நிச்சயம் கருடன் போல் சூரிக்கு இது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என சிவகார்த்திகேயன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

அதேபோல் படம் பற்றி பல சுவாரசியமான விஷயங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு வந்த இயக்குனர் மிஷ்கின் பேசிய பேச்சு முகம் சுளிக்க வைத்ததோடு வைரலாகி வருகிறது.

மிஷ்கினின் சர்ச்சை பேச்சு

எப்போதுமே வாய்க்கு வந்ததை பேசி சர்ச்சையில் சிக்கும் இவர் இப்படம் மக்களை சென்றடைய வேண்டும் என்றால் நான் ஆடை இல்லாமல் கூட நடிக்க தயார் என மேடையில் பேசியிருக்கிறார். நான் அப்படி ஆடினால் உங்களால் பார்க்க முடியுமா.

ஆனால் இந்த படம் ரசிகர்களிடம் சேர வேண்டும் என்பதற்காக இது ஒரு பிரமோஷன் என கூறியிருந்தார். இந்த அதிர்ச்சியை தாங்க முடியாத நெட்டிசன்கள் அடுத்ததாக அவர் பேசியதை கேட்டு மயங்கி விழாத குறை தான்.

அதாவது இப்படத்தின் ஒரு காட்சியில் சூரி உச்சா போய்க் கொண்டிருப்பார். அப்போது இயக்குனர் கேமராவை அப்படியே அருகில் கொண்டு செல்வார். அந்த காட்சியில் சூரி நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். என்ன ஒரு நடிப்பு எவ்வளவு நம்பிக்கை அந்த கேமரா மேல் என புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

இதைத்தான் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். உச்சா போறதுல என்னய்யா கலைநயம் வேண்டி இருக்கு என மிஷ்கினை பொளந்து வருகின்றனர். மேலும் இவருக்கு என்ன பைத்தியமா பொது இடத்தில் எப்படி பேசணும்னு கூட தெரியல என சிலர் ரோஸ்ட் செய்தும் வருகின்றனர்.

சூரி நடிப்பை பாராட்டி புகழ்ந்த நடிகர்

Trending News