வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஹாலிவுட் படத்தை காப்பி அடித்த சந்தானம்.. ஆதாரத்தோடு சிக்கிய டிடி ரிட்டன்ஸ் இயக்குனர்

DD Returns: சந்தானம், சுரபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் டிடி ரிட்டன்ஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ஹாரர், காமெடி கலந்து வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனாலேயே இப்படத்திற்கான வசூலும் ஏறுமுகமாக இருக்கிறது.

கடந்த பல தோல்விகளை சந்தித்து வந்த சந்தானம் தற்போது இப்படத்தின் வசூலால் ஏக குஷியில் இருக்கிறார். அந்த வகையில் இப்படம் தற்போது வரை பாக்ஸ் ஆபிஸில் 25 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.

Also read: பேராசையில் 10 பைசா வாங்காமல் நடித்துக் கொடுத்த சந்தானம்.. தயாரிப்பாளர்களை வச்சு செய்யும் சம்பவம்

இது ஒரு புறம் இருக்க இப்படம் ஹாலிவுட் படத்தின் அட்டை காப்பி என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது டிடி ரிட்டன்ஸ் வழக்கமான பேய் படங்கள் போல் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடி கலந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் இருந்தது.

அது மட்டும் இன்றி சந்தானத்தின் வழக்கமான ஃபார்முலாவும் இதில் கொஞ்சம் மாறுபட்டிருந்தது. இதுவே இப்படத்தின் வரவேற்புக்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறது. ஆனால் ஹாலிவுட் படமான ரெடி ஆர் நாட் ( Ready or Not) படத்தின் காப்பி தான் இந்த டிடி ரிட்டன்ஸ் என ரசிகர்கள் தற்போது ஆதாரத்தோடு வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர்.

Also read: பழைய பாணியை வைத்து உருட்டும் சந்தானம்.. தொட முடியாத உயரத்திற்கு சென்ற போட்டி நடிகர்

மேலும் திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து வெளிவந்த அப்படத்தில் கொஞ்சம் காமெடியை கலந்து தான் இயக்குனர் டிடி ரிட்டன்ஸ் படத்தை எடுத்திருக்கிறார். மற்றபடி ஹாலிவுட் படத்தில் வரும் கேம் ஷோ, வில் கொண்டு வேட்டையாடுவது, வயதான பாட்டி போன்ற பாணியில் தான் இப்படமும் வெளிவந்திருக்கிறது.

இந்த விவரங்களை தற்போது கண்டுபிடித்துள்ள ரசிகர்கள் இயக்குனரின் தில்லாலங்கடி வேலையை வெட்ட வெளிச்சமாக்கி வருகின்றனர். மேலும் சந்தானம் ஹாலிவுட் படத்தின் தயவில் தான் தற்போது வெற்றி பெற்றிருக்கிறார் என்றும் அதுவே அவருடைய தலையை காப்பாற்றி விட்டது என்றும் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Also read: எனக்கும் நயன்தாராவுக்கும் எப்படிப்பட்ட உறவு தெரியுமா.? ஓபன் ஆக போட்டு உடைத்த சந்தானம்

Trending News