திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

4 வாரிசு நடிகர்களை ஒரே படத்தில் தூக்கிவிடும் பா ரஞ்சித்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

இயக்குனர் பா ரஞ்சித் சியான் விக்ரமை வைத்து தங்கலான்  என்னும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். படத்தின் முக்கால்வாசி வேலைகள் முடிந்த நிலையில் ஒரு ஸ்டன்ட் காட்சியில் சியான் விக்ரம் டூப் இல்லாமல் நடித்த போது கீழே விழுந்து அவருக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் தங்கலான் படபிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் இயக்குனர் ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருக்கிறார். அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற படங்களை இயக்கியவர் மீண்டும் இளைஞர் கூட்டணியில் களமிறங்குகிறார். இந்த படத்திற்கு ப்ளூ ஸ்டார் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கிறது.

Also Read:அவருக்கு வில்லனா நடிக்க முடியாது.. விக்ரமை ஒரே செக்கில் ஓகே சொல்ல வைத்த லைக்கா

பொதுவாக சமூக அநீதி மற்றும் சாதி அரசியலை பற்றி பேசும் இயக்குனர் ரஞ்சித் இந்த படத்தில் விளையாட்டை பற்றி பேசி இருக்கிறார். இந்த படத்தின் பாடல் வீடியோ ஒன்று நேற்று ரிலீசானது. இந்த வீடியோவை பார்க்கும் பொழுதே படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. சென்னை 28 மற்றும் மெட்ராஸ் திரைப்படத்தின் கலவையாகவே இது இருக்கிறது.

எதிர் எதிர் பக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு பாக்யராஜ் கிரிக்கெட் விளையாட்டிற்காக மோதிக் கொள்வது போல் தான் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜின் மகன் பிரித்விராஜ், நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

Also Read:வளர்த்து விட்டுவிட்டவரை அடியோடு மறந்த விக்ரம்.. பொன்னியின் செல்வனை வைத்து கேரியரை ஓட்டும் பரிதாபம்

மேலும் 96 பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை மயக்கிய கோவிந்த் வசந்தா தான் இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். மேலும் பாடகர் அறிவு இந்த பாடலை எழுதி தன் சொந்த குரலில் பாடி இருக்கிறார். அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இந்த பாடல் காட்சி ஆரம்பிக்கிறது. மேலும் இந்த பாடல் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

இயக்குனர் பா ரஞ்சித் ஏற்கனவே தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கு பட வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்திலும் அடுத்தடுத்து வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை தூக்கி விட திட்டம் போட்டு இருக்கிறார். ரஞ்சித்தின் கதை மற்றும் கிரிக்கெட் விளையாட்டு என இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

Also Read:எல்லாம் அவளை மறக்கத்தான் என சுற்றித் திரிந்த விக்ரம்.. ஆறுதலுக்காக மணிரத்னம் எடுத்துள்ள தரமான முடிவு

Trending News