Teenz: பார்த்திபன் இயக்கி நடித்திருந்த டீன்ஸ் கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியானது. அதே தேதியில் தான் ஷங்கர், கமல் கூட்டணியின் இந்தியன் 2 படமும் ரிலீஸ் ஆனது. இதனாலேயே புதுமை இயக்குனர் வெற்றி பெறுவாரா என்ற ஆர்வமும் இருந்தது.
அதன்படி டீன்ஸ் படத்திற்கு இப்போது பாராட்டுக்களும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. இதில் இந்தியன் 2 படத்தின் மூன்று நாள் வசூல் இந்திய அளவில் 58 கோடிகளாக இருக்கிறது. அதே உலக அளவில் 100 கோடியை நெருங்கி விட்டது.
இதை வைத்து பார்க்கும் போது டீன்ஸ் பட வசூல் குறைவுதான். ஆனாலும் அதுவே தன்னை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்து விட்டதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். மேலும் முதல் நாளில் படத்திற்கு கூட்டமே இல்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.
சந்தோஷத்தில் மிதக்கும் பார்த்திபன்
இதுவரை படத்தின் வசூல் பற்றி நான் கணக்கிடவில்லை. பணத்தை மீறி படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்னை பரவச நிலையில் ஆழ்த்திவிட்டது என தன் சோசியல் மீடியா பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் டீன்ஸ் படம் இதுவரை 1.5 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. சிறு பட்ஜெட் படம் என்பதால் இது நிச்சயம் லாபகரமாகத் தான் இருக்கும். மேலும் திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் ஆகும் அளவுக்கு கூட்டம் இல்லை என்றாலும் படம் பிடித்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் பார்த்திபன் முன்பு பிரம்மாண்ட இயக்குனர் தடுமாறி விட்டார் என்ற கருத்துக்களும் கிளம்பியுள்ளது. இதுவே இந்தியன் 2 பட குழுவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
ஆக மொத்தம் பார்த்திபனின் அமானுஷ்ய முயற்சி அவருக்கு கை கொடுத்துள்ளது. இது என்ன ஷங்கருக்கு வந்த சோதனை. இதில் இந்தியன் 3 அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. அதாவது ரசிகர்களை கவருமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.
இந்தியன் 2 உடன் போட்டி போட்ட பார்த்திபன்
- இந்தியன் 2 சொதப்பலுக்கு அரசியல் தலையீடு தான் காரணமா.?
- நெகட்டிவ் விமர்சனங்களால் குறையும் இந்தியன் 2 வசூல்
- இந்தியன் 2க்கு போட்டியாக வந்த டீன்ஸ்