வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

TVK தலைவர் விஜய்யை சந்தித்த பார்த்திபன்.. ரகசிய அரசியல் வியூகம், பரபரப்பான ட்வீட்

Vijay: விஜய் 2026 தேர்தலில் முதல்வர் நாற்காலியை பிடித்து ஆகவேண்டும் என்ற தீவிரத்தில் இருக்கிறார். அதற்கு ஏற்றார் போல் அவருடைய அரசியல் திட்டங்கள் இருக்கின்றது.

parthiban
parthiban

மேலும் ஆதவ் அர்ஜுனா உட்பட பலர் கட்சியில் இணைந்துள்ளனர். இன்னும் பல முக்கிய புள்ளிகளும் இணைவார்கள் என்று கூட செய்திகள் கசிந்துள்ளது.

இந்த சூழலில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் விஜய்யை சந்தித்தது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் விஜய் உடனான ஊடலான உரையாடல். பஜ்ஜியுடன் தேநீர் ருசித்தபடி வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் பற்றி பேசினோம்.

TVK தலைவர் விஜய்யை சந்தித்த பார்த்திபன்

விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். அதை பதிவு செய்து கொள்ளலாம் என செல்ஃபி எடுக்க நினைத்தேன். ஆனால் அது கனவு.

இப்படி ஒரு பகல் கனவு இரவில் ஏன் வந்தது. ஆனால் சத்தியமாக வந்தது. கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள்.

சமீப காலமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள். அதற்கு என் மந்தமான பதில்கள் இப்படி பல காரணமாக இருக்கலாம் என ட்வீட் செய்துள்ளார்.

இதனால் அவர் டிவிகே கட்சியில் இணைய போகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பார்த்திபனின் கனவு பலிக்குமா.?

Trending News