KS Ravikumar: மிக்சர் என்ற வார்த்தையை ஒருத்தரை திட்டுவதற்கு பயன்படுத்தும் அளவுக்கு பேமஸ் ஆனது நாட்டாமை படத்தின் மூலம் தான்.
கவுண்டமணி ஒரு வீட்டில் பெண் பார்க்க போவார். அப்போது செந்தில் உன்னோட அம்மாவ வர சொல்லுங்க என்று சொல்லுவார்.
அதற்கு கவுண்டமணி என் பொண்ணோட அப்பா கிட்ட எல்லாம் பேச மாட்டியா என்று கேட்பார். அதற்கு செந்தில் அவர் வந்ததுல இருந்து சாப்பிட்டுகிட்டே இருக்காரு என்று பதில் சொல்லுவார்.
மிக்ஸர் சாப்பிடுற கேரக்டர்ல நடிச்சது யார் தெரியுமா?
அவரும் ஒரு அழகுக்கு உட்கார்ந்து மிச்சர் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருப்பார். இவர் மிச்சர் சாப்பிடும் புகைப்படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அப்போதைய முதல்வரை விமர்சித்து பெரிய அளவில் பிரபலமானது.
அதிலிருந்து யாராவது எனக்கென்ன என்று இருந்தால் அவர்களை மிச்சர் என்று சொல்லும் பழக்கமும் வந்தது ஆனால் உண்மையிலேயே இந்த கேரக்டரில் நடித்தது யார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்திருக்கும்.
அதற்கான பதிலை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். அந்த கேரக்டரில் நடித்தவர் பட குழுவில் இருந்த எலக்ட்ரிசியன்.
அவர் எப்போதும் படப்பிடிப்பில் ஏதாவது மிச்சர் முறுக்கு என்று சாப்பிட்டுக் கொண்டே தான் இருப்பாராம்.
ஏதாவது வேலை சொன்னால் இது என் வேலை கிடையாது, நான் எலக்ட்ரீசியன் வேலைதான் பார்ப்பேன் என்று சொல்வாராம். அவரைத்தான் இந்த கேரக்டரில் நடிக்க வைத்ததாக கே எஸ் ரவிக்குமார் பதில் அளித்திருக்கிறார்.