சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

வளர்த்துவிட்டவரை மதிக்காத ராஷ்மிகா.. நச்சென்று பதில் கொடுத்த வெற்றி பட இயக்குனர்

நடிகை ராஷ்மிகா மந்தனா ‘க்ரிஷ் பார்ட்டி’ என்னும் கன்னட படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். கீதகோவிந்தம் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் . இந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இவரை கொண்டாடினர். ஒரு கன்னட நடிகை இந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார் என்றால் அது ராஷ்மிகா தான்.

நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமா உலகின் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது இவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கோலிவுடின் சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் உடன் வாரிசு படத்தில் ஹீரோயின் ஆக நடித்து தமிழிலும் நேரடியாக அறிமுகமாகியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

Also Read: ஓவர் மெதப்பில் இருக்கும் ராஷ்மிகா.. அடிச்சு துரத்திய பிரம்மாண்ட இயக்குனர்

கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா தன்னுடைய எந்த ஒரு பேட்டியிலும் கன்னட சினிமாவைப் பற்றி பேசியதே கிடையாது. ஏன் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கூட எந்த ஒரு பேட்டியின் போதும் நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னது கூட கிடையாது. ராஷ்மிகாவுக்கு கன்னட இண்டஸ்ட்ரியின் மீது ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி என்று இதுவரை தெரியவில்லை.

இத்தனைக்கும் ராஷ்மிகாவை கன்னடத்தில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் ரிஷப் ஷெட்டி. இவர் தான் இன்று உலக அளவில் ட்ரெண்டான காந்தாரா திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர். இந்தப் படத்தை ஒட்டுமொத்த திரையுலகமும் பாராட்டி வரும் வேளையில் நடிகை ராஷ்மிகா இந்தப் படத்திற்கு எந்த ஒரு பாராட்டையும் தெரிவிக்கவில்லை. இந்த நிகழ்வு கன்னட ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவே இருக்கிறது.

Also Read: அம்பலமானது விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா ரகசிய உறவு.. போட்டோவால் ஷாக்கான குடும்பம்

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டியிடம் அவருடைய அடுத்த படத்தில் நடிகை ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரிஷப் இந்த நிகழ்ச்சி முடித்து அடுத்து நான் எங்கே செல்வேன் என்று எனக்கு தெரியாது. அதனால் பின் நாட்களில் என்ன நடக்கும் என் படத்தில் யார் நடிப்பார்கள் என்று இப்போதே என்னால் சொல்ல முடியாது என்று கூறிவிட்டார்.

மேலும் பேசிய அவர், கன்னட திரை உலகில் இருந்து சென்ற நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தென்னிந்தியாவின் மிக முக்கிய நடிகையாக மாறி இருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியிருக்கிறார். ரிஷப் ஷெட்டியின் இந்த பதில் அவருடைய பெருந்தன்மையை காட்டுவதாகவே இருக்கிறது.

Also Read: ஓவர் கெத்து காட்டிய ராஷ்மிகா.. கண்டுக்காமல் நோஸ்கட் செய்த காந்தாரா இயக்குனர்

Trending News