திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

நான் ஏழுமுறை தற்கொலைக்கு முயன்றேன்.. அதிர்ச்சியில் உறைய வைத்த செல்வராகவன்

Selvaraghavan: இயக்குனர் செல்வராகவன், 90ஸ் கிட்ஸ் களுக்கு என்று தரமான படங்களை கொடுத்தவர். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்கள் எல்லாம் இன்று வரை நம்முடைய ஃபேவரட் லிஸ்டில் இருக்கிறது.

அதுபோல மயக்கம் என்ன படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், வாழ்க்கையில் எதையாவது ஒன்றை சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இந்த படம் ஒரு பாடம். அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் காலத்திற்கும் அவருடைய பெயர் சொல்லும்.

சில வருடங்களாக படம் இயக்குவதற்கு ஓய்வு கொடுத்துவிட்டு தன்னை ஒரு நல்ல நடிகனாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார் செல்வா. பீஸ்ட், நானே வருவேன், பாகாசுரன், சாணிக்காயுதம் போன்ற படங்களில் தன்னை சிறந்த நடிகனாக நிரூபித்த செல்வராகவன் சமீபத்தில் தன்னுடைய தம்பி இயக்கத்திலும் நடித்து முடித்தார்.

ஏழுமுறை தற்கொலைக்கு முயன்றேன்

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான அவருடைய 50ஆவது படமான ராயன் படத்தில் செல்வராக வழக்கு முக்கியமான கேரக்டர். செல்வராகவன் கடந்த சில மாதங்களாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொம்பவும் ஆக்டிவாக இருக்கிறார்.

செல்வராகவன் பகிர்ந்து கொள்ளும் சில விஷயங்கள் மனதுக்கு உந்துதல் தருவதாக இருக்கிறது. இந்த வரிசையில் நேற்று அவர் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் தான் ஏழு முறை தற்கொலைக்கு முயன்றதாக சொல்லி இருக்கிறார்.

அந்த வீடியோவில், வாழ்க்கையில் இந்த இரண்டு விஷயங்களை சந்திக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஒன்று மன அழுத்தம், மற்றொன்று தற்கொலை முயற்சி. இது இரண்டுமே நான் சந்தித்து இருக்கிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நான் ஏழு முறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறேன்.

ஆனால் ஒவ்வொரு முறையும் நாம் தற்கொலைக்கு முயற்சி செய்யும் பொழுதெல்லாம் மனதிற்குள் ஒரு குரல் பொறுமையாக இரு என்று சொல்லிக் கொண்டே இருக்கும். அது கடவுளாக இருக்கலாம், வேறு எதுவாக கூட இருக்கலாம்.

அந்த குரல் ஒலிக்கும் பொழுதெல்லாம் நான் தற்கொலை முயற்சியை தள்ளிக் கொண்டு போனேன். அப்படி நான் ஒவ்வொரு முறையும் தற்கொலை முயற்சியை தள்ளிக்கொண்டு போகும் போதெல்லாம் அதிலிருந்து பத்து நாட்களிலேயே அல்லது ஆறு மாசத்திலேயே என் வாழ்க்கையில் வேறு ஏதாவது ஒரு சந்தோஷமான விஷயம் கண்டிப்பாக நடக்கும்.

ஒரு பிரச்சனை நமக்கு வரும் பொழுது அதனுடன் சண்டையிடாமல் ஆமா இது இப்படித்தான் இருக்கு என்று அதோடு வாழ பழகினால் கண்டிப்பாக வேறு எந்த தவறான எண்ணமும் நம் மனதிற்குள் வராது. இந்த ஜென்மத்துல தான் இவ்வளவு கஷ்டம், செத்து அடுத்த ஜென்மத்துல யாது நிம்மதியான வாழ்க்கை வாழ்வோம் என பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் செத்த பிறகு என்ன நடக்குதுன்னு நமக்கு தெரியுமா. செத்து ஒரு சாக்கடையில் வாழும் பண்ணியாகவோ, அல்லது காட்டிலும் மரத்தில் தொங்கும் பேயாகவோ நாம் வாழ்க்கை மாறிவிட்டால் அது இதைவிட கொடியது அல்லவா.

அதனால் இப்போது இருக்கும் வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என ரொம்பவும் உணர்ச்சி பூர்வமாக செல்வராகவன் இந்த பதிவை போட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுக்கு ஒரு சிறந்த பாடமாக இந்த வீடியோ இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News