செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பாலாவை தூக்கி சாப்பிடும் மண்ட கோளாறு பிடிச்ச இயக்குனர்.. தப்பை மறைக்க சாதியை இழுத்த கேவலம்

Director Bala: இயக்குனர் பாலா எப்படிப்பட்டவர் என்பது ஊர் உலகமே அறிந்ததுதான். மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற பெயரில் அவர் அனைவரிடமும் கொஞ்சம் அராஜகமாக நடந்து கொள்வார். அப்படித்தான் தற்போது ஒரு இயக்குனரும் இவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு மண்ட கோளாறுடன் திரிந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய நியாயத்தை முன்வைக்கிறேன் என்ற பெயரில் அவர் கொடுக்கும் அலப்பறை தற்போது பலரையும் கடுப்பாக்கி வருகிறது. அதிலும் உலகநாயகனையே அவர் தாறுமாறாக விமர்சித்தது ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இப்படி சமீப காலமாக பெரும் பரபரப்பை கிளப்பி வரும் இயக்குனர் தான் மாரி செல்வராஜ்.

Also read: மாமன்னன் பட ரிலீஸ் க்கு வந்த புது சிக்கல்.. சுத்தி அடிக்கும் கர்மாவால் உதயநிதி படும் பாடு

உதயநிதியின் கடைசி படமான மாமன்னனை இயக்கியிருக்கும் இவர் அதை ப்ரோமோஷன் செய்கிறேன் என்ற பெயரில் தேவையற்ற சர்ச்சைகளையும் இழுத்துக் கொள்கிறார். எப்படி என்றால் உதயநிதி தற்போது ஒரு பேட்டியில் மாரி செல்வராஜ் சூட்டிங் ஸ்பாட்டில் எந்த அளவிற்கு மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார் என்பதை வெளிப்படையாக போட்டு உடைத்து இருந்தார்.

அதாவது படப்பிடிப்பு தளமே இவரால் ரணகளமாக இருக்கும் என்றும் அசிஸ்டன்ட் இயக்குனர்கள் முதல் அனைவரையும் இவர் கண்டபடி அடிப்பார் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அப்போது உடன் இருந்த வடிவேலு கூட ஆமாம் சாமி போட்டார். பொதுவாக சில இயக்குனர்கள் படப்பிடிப்பு தளத்தில் இது போன்று கோபமாக நடந்து கொள்வதுண்டு.

Also read: கமல்ஹாசன் மீது மாரி செல்வராஜுக்கு இருக்கும் வன்மம்.. தேவர்மகனை பழிவாங்க வரும் மாமன்னன்

ஆனால் ஒரு ஹீரோவே வெளிப்படையாக இயக்குனர் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார் என்று கூறியிருப்பது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. மேலும் பல ஹிட் படங்களை கொடுத்த வெற்றி ஜாம்பவான்கள் கூட இப்படி எல்லாம் யாரிடமும் கடுமை காட்டியது கிடையாது. ஆனால் மாரி செல்வராஜ் இப்படியெல்லாம் நடந்து கொண்டு அதை நியாயப்படுத்தியும் பேசி வருகிறார்.

அதாவது இவர் ஒரு பேட்டியின் போது நான் என்னிடம் வேலை செய்பவர்களை அடிப்பேன் என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இதுவும் ஒரு சாதிதான். ஏனென்றால் நான் அடித்தால் என்னை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் என்னுடைய அதிகாரத்தை செலுத்துகிறேன். இதுதான் சாதி என்று குறிப்பிட்டு இருந்தார்.

Also read: எல்லா படங்களிலும் ஒரே சீனை காப்பியடிக்கும் மாரி செல்வராஜ்.. மாமன்னன் ட்ரைலரால் அம்பலமான சீக்ரெட்

இதுதான் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஏனென்றால் இவருடைய படங்களில் சாதி பற்றிய கருத்து எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அது மட்டுமின்றி பேட்டிகள், மேடைகள் என அனைத்திலும் அவர் இது குறித்த வாதத்தை தான் முன் வைப்பார். அப்படித்தான் இப்போது மாமன்னன் படத்திற்காக இவர் தாறுமாறாக பேசி வருகிறார். ஒரு வேலை படம் சரியாக போகவில்லை என்றால் இயக்குனரின் கதி அவ்வளவுதான்.

Trending News