புதன்கிழமை, ஜனவரி 15, 2025

10 கோடியை வீணாக்கிய ஷங்கர்.. அம்பலமான மருமகனின் போக்சோ வழக்கு

தற்போது ஹாட் நியூஸ் ஆக பேசப்படுவது இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நின்று போனதுதான். கடந்த வருடம் ஜூன் மாதம் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போதைய காலகட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் தற்போது விமர்சையாக வரவேற்பு நிகழ்ச்சியை ஷங்கர் ஏற்பாடு செய்திருந்தார்.

பல கோடிகள் செலவு செய்து மிகப்பிரம்மாண்டமாக மே 1ஆம் தேதி ரிசப்ஷன் நடக்க இருந்தது. இதற்கு பல பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஷங்கர் தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் தேதியை தள்ளிவைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிட்டத்தட்ட பத்து கோடிகளுக்கு மேல் செலவு செய்துவிட்டு தற்போது வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தியதற்கு காரணம் என்ன என இணையத்தில் பல செய்திகள் உலாவி வருகிறது. அதில் முக்கிய காரணமாக பேசப்படுவது ஷங்கரின் மருமகன் ரோகித் ஒரு கிரிக்கெட் கோச்.

இவரும், இவரது நண்பர்களும் கோச்சிங் செய்யும் பெண்கள் அணியில் உள்ள ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கடந்த ஆண்டு பிரச்சினை எழுந்தது. மேலும் அந்தப் பெண் ரோகித் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

தற்போது வரை அந்த பெண் இந்த வழக்கில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. அதனால் இந்த பிரச்சினை தற்போது வலுப்பெற்று உள்ளது. மேலும் இதனால் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மற்றும் ரோஹித் இடையே பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டுள்ளார்.

இதனால் இப்போது திருமண வரவேற்பு வைத்தால் பல பிரச்சினைகள் எழக்கூடும் என்பதால் தற்போது இந்த நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளார் ஷங்கர். ஆனால் தற்போது ஷங்கர் இந்த ரிசப்ஷனை ஒத்திவைத்ததால் இந்தப் பிரச்சனை மிகப் பூதாகரமாக வெடித்துள்ளது. மேலும் ரசிகர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News