
Shankar: இயக்குனர் ஷங்கருக்கு அடுத்தடுத்து பல பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறது. இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இதனால் அவர் கொஞ்சம் அப்செட்டில் உள்ளார். இந்த சூழலில் எந்திரன் கதை காப்புரிமை விவகாரம் வேறு அவரை பாடாய்படுத்துகிறது.
2010ல் வெளிவந்த எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் நீதிமன்றம் பதிப்புரிமை மீறல் நடக்கவில்லை என தீர்ப்பளித்தது.
அமலாக்கத் துறைக்கு பதிலடி கொடுத்த ஷங்கர்
இந்நிலையில் அவருடைய 10 கோடி மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை அமலாகத்துறை முடக்கி இருக்கிறது. இது அதிகார துஷ்பிரயோகம்.
நீதிமன்றம் இந்த வழக்கை நன்றாக விசாரித்து தள்ளுபடி செய்தது. ஆனால் அமலாக்கத்துறை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து இப்படி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்த எந்த தகவலும் எனக்கு வரவில்லை. இத மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் அப்படி இல்லை என்றால் நான் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என ஷங்கர் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.