வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆஹா எல்லாத்துக்கும் சென்டிமென்ட் பார்க்கும் ஷங்கர்.. முதல்வன் முதல் நண்பன் வரை

சினிமாவில் உள்ள இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சென்டிமென்ட் இருக்கும். சிலர் படத்தின் பெயரை கடவுளின் பெயராக வைப்பார்கள், சில இயக்குனர் தன் படத்தில் நடக்கும் கதாநாயகன் கடவுள் பெயராக வைப்பார். இதற்கு எடுத்துக்காட்டாக இயக்குனர் தரணி தன்னுடைய படங்களில் கதாநாயகிகளுக்கு முருக கடவுள் சம்பந்தமான பெயர்களை வைப்பார்.

அவ்வாறு பிரம்மாண்ட படங்கள் என்றாலே அது இயக்குனர் ஷங்கர் தான். இவர் இந்தியன், காதலன், ஜென்டில்மேன், ஜீன்ஸ், எந்திரன், நண்பன் போன்ற பிரம்மாண்ட படங்களை எடுத்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர். ஷங்கரின் இஷ்ட தெய்வம் பூ மனத்து பிச்த்ததா.

ஷங்கர் இந்த சுவாமி பெயரை பல படங்களில் பயன்படுத்தியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டான படம் முதல்வன். இப்படத்தில் ஒரு காட்சியில் வடிவேலுவின் இடுப்பை கிள்ளும் போது பூ மனத்து பிச்த்ததா என்ற வசனம் வரும்.

அதேபோல் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் ஸ்ரீகாந்த் ஏர்போர்ட்டில் பூ மனத்து பிச்த்ததா என்று சொல்லும் காட்சியிலும் ஷங்கரின் கடவுள் பக்தி வெளிப்படுகிறது. இவ்வாறு பிரம்மான்டத்துடன் இந்தப் கடவுளின் பெயரும் இடம்பெற்றால் படம் நிச்சயம் ஹிட்டாகும் என்பது ஷங்கரின் நம்பிக்கை.

இந்நிலையில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி. இவரும் தனது குருநாதர் ஷங்கரை ஃபாலோ செய்கிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் நடிகை காஜல் அகர்வால் என்னுடைய இஷ்டதெய்வம் பூ மனத்து பிச்த்ததா என்று சொல்லும் காட்சியும் இடம்பெற வைத்திருந்தார்.

இவ்வாறு மிகப்பெரிய இயக்குனர்கள் கடவுளின் மீது அதீத ஈடுபாடு ஆல் தங்கள் படங்களில் ஏதாவது சென்டிமென்ட் பார்க்கிறார்கள். அதுவும் சில சமயங்களில் ஒர்க் அவுட் ஆகிறது. அவ்வாறு ஷங்கர் தனது இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்து படங்கள் வெற்றி பெறச் செய்கிறார் என்ற பேச்சும் சினிமா வட்டாரத்தில் அடிபடுகிறது.

Trending News