நடிகர் நாசர் திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், துணை நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருபவர். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல திரைப்படங்களில் இவரை பார்க்கலாம்.
நடிகர் நாசர் நடிக்க வந்த காலகட்டத்தில் வாய்ப்பு கிடைத்ததே அவருக்கு அரிதானது என பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். அந்த சமயத்தில் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள் நாசருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
Also Read : இளையராஜா இசை அமைக்காத ஒரே நடிகரின் படம்.. 40 வருட சினிமா வாழ்க்கையில் நிகழ்ந்த ஆச்சரியம்
அப்போது படத்தின் ஷூட்டிங்கின்போது நாளை காலை 10 மணிக்கு வருமாறு நாசரிடம் படக்குழு கூறினார்களாம். ஆனால் நாசர் முந்தைய நாள் லேட்டாக ஷூட்டிங் முடிந்ததால் காலையில் எதார்த்தமாக அரை மணி நேரம் லேட்டாகவே ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார்.
உடனே இயக்குனர் கே.பாலச்சந்தர் ஏன் லேட்டாக வந்தாய் என ஒரு கேள்வி கூட நாசரை பார்த்து கேட்கவில்லையாம். அதற்கு மாறாக நீ லேட்டாக வந்ததால் அரை மணி நேரம் உன்னுடைய நேரம் மட்டும் கிடையாது. இங்குள்ள 40 பேரின் நேரமாகும் உனக்காக இங்குள்ள லைட்மேனிலிருந்து கேமராமேன் வரை பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Also Read : கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள்
40 பேரின் அரை மணிநேரம் என்றால் கணக்கு போட்டு பார், 20 மணி நேரம் கிட்டத்தட்ட ஒரு நாள் கணக்கு, ஒரு நாளையே வீணாக்கியதற்கு சமம், உனது அரைமணி நேரம் என்று கே.பாலச்சந்தர் படபடவென நாசரை விளாசினாராம். அதன்பின் மன்னிப்பு கேட்ட நாசர் நேரம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இயக்குநர் கே.பாலச்சந்தர் தன்னிடம் சொன்னார்.
அதிலிருந்து நான் ஒருமுறை கூட எந்த ஒரு படப்பிடிப்பிற்கும் லேட்டாக செல்லவில்லை. தற்போது வரை கரெக்டான நேரத்துக்கு நான் ஷூட்டிங்கிற்கு சென்று விடுவேன் என்று நாசர் தெரிவித்தார். நேரத்தின் முக்கியத்துவத்தை அன்று கே.பாலச்சந்தர் தன்னிடம் சொல்லவில்லை என்றால் இன்றைக்கு நாசர் என்ற நடிகர் இருந்திருக்க அதிக வாய்ப்பு இருக்காது எனவும் தெரிவித்தார்.
Also Read : ரேவதி நடித்து பட்டையை கிளப்பிய படங்கள்.. 100 நாட்கள் ஓடி சாதனை