Suseenthiran: வெண்ணிலா கபடி குழு இயக்குனர் சுசீந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்.
அதில் அவருடைய இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான ஆதலால் காதல் செய்வீர் படத்தைப் பற்றியும் பேசி இருக்கிறார்.
இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்றுதான் சொல்ல வேண்டும். அவசர அவசரமாக காதலித்து அதன் பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் காதலை உதறித் தள்ளும் ஹீரோ ஹீரோயின்.
நான் ஒன்னும் அவ்ளோ பெரிய சைக்கோ இல்ல
தங்களுக்கு பிறந்த குழந்தையை அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டு அவரவர் புதிய வாழ்க்கையை தொடங்குவது தான் இந்த படத்தின் கதை.
இதில் கிளைமாக்ஸ் காட்சியில் ஆராரோ என்று சொல்ல யாரும் இல்லை என்று ஒரு பாடல் வரும்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் குரலில் இந்த பாடலை கேட்டு அழாதவர்களை இல்லை என்று சொல்லலாம்.
அதிலும் ஒரு அனாதை ஆசிரமத்தில் வளரும் குழந்தை எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக காட்டியிருப்பார்.
இதில் அந்த குழந்தை நடந்து வரும்போது வெயிலில் கால் சுட்டு அப்படியே உட்கார்ந்து அழும். இதை பலரும் இது நல்ல ஐடியா ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொன்னார்கள்.
ஆனால் ஒரு குழந்தையை வெயிலில் நடக்க வைத்து அழ வைக்கும் அளவுக்கு நான் சைக்கோ இல்ல.
அந்த குழந்தை கால் சுடுவதால் அழுகிறது என்பதை புரிந்து கொள்ளவே எங்களுக்கு மூன்று நான்கு வினாடிகள் ஆகிவிட்டது.
உடனே என்னுடைய உதவி இயக்குனர் அந்த குழந்தையை ஓடிப் போய் தூக்கி விட்டார் என சுசீந்திரன் பகிர்ந்திருக்கிறார்.