ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிரதீப் ரங்கநாதனுக்கு ஏற்பட்ட திருட்டு பட்டம்.. இதில் விக்கியும் சேர்ந்தா செமையா இருக்கும்!

Director Vignesh shivan and Pradeep combo film LIC title issue:கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதிப் ரங்கநாதன் தனது மாறுபட்ட திரைக்கதையின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அடுத்ததாக தான் கதாநாயகனாக அறிமுகமான லவ்டுடே மூலம் சாமானியன் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை அனைவரையும் தன் படத்தை கொண்டாட வைத்தார்.

இந்த மனுஷனுக்குள் ஏதோ இருக்கு என்று ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கும்போது கோமாளி படத்தின் கதையை தன்னுடையது என்று பார்த்திபனின் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் சங்கத்தை நாடிய போது “கிருஷ்ணமூர்த்திக்கு நன்றியும் வாழ்த்துக்களும்” என்று கோமாளி படத்தில் ஒரு வரியைப் போட்டு ஏமாற்றினார்.

அதேபோன்று அடுத்ததாக தான் நடித்த லவ் டுடே மூவி படத்தின் கதை ஏற்கனவே அறிவுமதி எழுதிய பாடல் எனவும் அந்தப் பாடலை கருத்தை ஏற்றுக் கொண்ட இயக்குனர் ஒருவர், தான் இதை உபயோகித்து கொள்கிறேன் என்று கூறியிருந்ததாகவும் தகவல் வந்தது. படம் வெளிவந்த போது அறிவுமதி, “அனுமதி கேட்டு இருக்கலாம், இயக்குனர் நல்லா வரட்டும்!” என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுக்கவே சர்ச்சை பெரிதாகாமல் போனது.

Also read: நாலா பக்கமும் ஏழரை சனியால் முழிக்கும் விக்னேஷ் சிவன்.. டைட்டிலுக்கு போடும் சண்டை

இயக்குனர் அவர்தான்! ஆனா கதை என்னோடது என்று ஒவ்வொருவராக சொந்தம் கொண்டாட பிரச்சனை பூதாகரமாகி சப்பென்று முடிந்தது. அடுத்தவர் டைரக்ஷனில் நடிக்கலாம் என்று விக்னேஷ் சிவன் உடன் கைகோர்த்த பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்த சோதனை படத்தின் டைட்டில் வடிவில் வந்தது.

பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் டைட்டில் எல்ஐசி என்னுடையது என்று கொடிபிடித்து உள்ளார் இயக்குனர்  எஸ் எஸ் குமரன். முதலில் பின்வாங்கிய விக்னேஷ் சிவன், நயன்தாரா கூட்டணி பணம் கொடுத்து டைட்டிலை தக்க வைக்க மனம் இல்லாமலும் சொந்தமாக யோசித்து வேறு டைட்டில் வைக்க முடியாமலும் அடுத்தவர் டைட்டிலை அபகரித்து உள்ளனர்.

டைட்டிலோ கதையோ தற்செயலாக  கூட இருந்திருக்கலாம். ஆனால் திருட்டு பட்டத்தை சுமந்து விக்னேஷ் சிவன், நயன்தாரா, பிரதீப் கூட்டணி தரமான, சர்ச்சைகளுக்கு அஞ்சாத கூட்டணியாக மாறி உள்ளது. சோப்பு பவுடர் விளம்பரம் மாதிரி கறை நல்லது!

Also read: அஜித் கிட்ட விட்டதை பிரதீப் கூட்டணியில் எடுக்கப் போகும் விக்கி.. SJ சூர்யா வெளியிட்ட பதிவு

Trending News