வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினியை விடாமல் துரத்தும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்.. அடுத்த படத்திற்கு இப்படி ஒரு போட்டியா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எத்தனை தோல்வி படங்கள் கொடுத்தாலும் இப்போது வரை அவரது மீது உள்ள மரியாதை என்றென்றும் நிலைத்திருக்கும். காரணம் தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டார் என்றால் உடனே நினைவுக்கு வருவது என்றால் ரஜினி மட்டுமே.

இதனால் தான் இவருடைய படத்தை இயக்க பிரம்மாண்ட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். ரஜினி தாமாகவே முன்வந்து லோகேஷ் கனகராஜ் இடம் தனது படத்தை இயக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த படம் ரஜினியின் கடைசி படமாக எடுக்கப்பட உள்ளது.

Also Read : ஏவிஎம் தயாரிப்புடன் கூட்டணி அமைத்து எஸ். பி. முத்துராமன் கொடுத்த 6 ஹிட் படங்கள்.. ரஜினி, கமலை தூக்கி விட்டு அழகு பார்த்த இயக்குனர்

ஆனால் லோகேஷின் கைவசம் இப்போது நிறைய படங்கள் உள்ளது. விஜய்யின் லியோ படத்தை தொடர்ந்து விக்ரம் 2, கைதி 2 போன்ற படங்களை லோகேஷ் எடுக்கவிருக்கிறார். ஆகையால் இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை லோகேஷ் எடுக்கவிருக்கிறார்.

அதுக்குள்ளாகவே ரஜினியின் படத்தை தாங்கள் இயக்க வேண்டும் என பெரிய இயக்குனர்கள் போட்டி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் கேஜிஎஃப் மற்றும் காந்தாரா படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் ரஜினியின் படத்தை தயாரிக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

Also Read : அந்த கேடுகெட்ட பழக்கத்திற்கு அடிமையான 6 நடிகைகள்.. ரஜினி மிஞ்சிய ஆண்ட்ரியா, அமலா பால்

இவர்கள் ரஜினியை சந்தித்த பிறகு அடுத்த அரை மணி நேரத்தில் சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கராவை சந்தித்து பேசி உள்ளனர். ஏற்கனவே இவருக்கு தயாரிப்பு நிறுவனம் அட்வான்ஸ் தொகையை கொடுத்து உள்ளது. அதாவது சிம்பு மற்றும் சூர்யாவின் படத்தை இயக்க உள்ளதாக அப்போது தகவல் வெளியானது.

இப்போது ரஜினி படத்தை தான் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் வந்துள்ளது. மேலும் ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெய்பீம் இயக்குனருடன் ரஜினி கூட்டணி போட உள்ள நிலையில் அதற்கு அடுத்ததாக சுதா கொங்கராவுடன் இணைய உள்ளார்.

Also Read : ரஜினியை மரியாதை இல்லாமல் திட்டிய பிரபல நடிகை.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்கள்

Trending News