Nelson, Lokesh Kanagaraj: திண்ணையில கடந்தவனுக்கு திடுக்குன்னு அடிச்சதாம் அதிர்ஷ்டம்ன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி ஒரு அதிர்ஷ்ட காத்து தான் இப்போ லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் வாழ்க்கையில் அடித்துக் கொண்டிருக்கிறது.
தன்னுடைய வித்தியாசமான படங்களின் மூலம் இன்றைய சினிமா ரசிகர்களை இவர்கள் இருவரும் வேண்டி கட்டி போட்டு வைத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த சில வருடங்களாக வெற்றி படங்களே பார்க்காத சூப்பர் ஸ்டாருக்கு பெரிய வெற்றியை அசால்டாக கொடுத்தார் நெல்சன்.
இவருடைய இயக்கத்தில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் தான். அதே போன்று தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். உலகநாயகன் கமலஹாசனுக்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பெயர் சொல்லும் அளவுக்கு விக்ரம் எனும் படத்தை கொடுத்தார்.
இவர்கள் இருவருமே குறுகிய காலகட்டத்தில் பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கி புகழ் பெற்றார்கள். அட என்ன தான்ப்பா இருக்குது உங்க படத்துல யோசிச்சா இந்த கால ட்ரெண்ட் இருக்குது. அதனால தான் இவர்களோடு படம் வெற்றியும் பெறுகிறது.
இப்போதைக்கு சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் இவர்கள் இரண்டு பேரும் தான் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். குறுகிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்குள் பெரிய உச்சத்தை அடைந்த இவர்கள் இருவரது சம்பள விவரமும் தற்போது வெளியில் தெரிய வந்திருக்கிறது.
நெல்சன், லோகேஷ் சம்பளம்
மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம், லியோ என இதுவரை ஐந்து படங்களை மட்டுமே இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்திற்காக 60 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.
அதேபோன்று கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ், ஜெயிலர் என நான்கு படங்களை மட்டுமே இயக்கி இருக்கும் நெல்சன் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு சின்ன காலகட்டத்தில் இப்படி பெரிய வெற்றியை பெற்றது அட்லி தான்.
இப்போது அவருக்கு போட்டியாக இவர்கள் இருவரும் சம்பள விஷயத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் மூன்று பேருமே தளபதியின் படத்தை இயக்கியதால் ஃபேமஸ் ஆனவர்கள். இவர்களை தளபதியின் விழுதுகள் என்று கூட சொல்லலாம்.