திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்த 6 இயக்குனர்கள் படம்னாலே ‘ஏ’ சர்டிபிகேட் கன்ஃபார்ம்.. கதையை விட அந்த மாதிரி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது

தென்னிந்தியாவில் பல இயக்குனர்கள் தங்களது திரைப்படங்களில் கதை உள்ளதோ, இல்லையோ கட்டாயம் கிளாமர் காட்சிகளை வைத்து படத்தின் வசூலை அள்ளிக் கொள்வர். அதற்கேற்றார்போல பல நடிகைகளும் தங்களது அழகை வெளிப்படுத்தி கிளாமர் காட்சிகளில் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தேடி கொள்வர். அப்படிப்பட்ட நடிகைகளை டார்கெட் செய்து தாங்கள் இயக்கும் திரைப்படங்களில் முழுக்க முழுக்க கிளாமரான காட்சிகளை வைத்து இயக்கிய இயக்குனர்கள் பலர் உள்ளனர். அவர்கள் இளைஞர்களை குஷிப்படுத்தினாலும் இல்லத்தரசிகளின் வெறுப்பை சம்பாதித்து உள்ளனர். அப்படி கிளாமருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கும் 6 இயக்குனர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

ராம்கோபால் வர்மா : தமிழில் வெளியான சிவா, ரங்கீலா திரைப்படத்தை இயக்கிய ராம் கோபால் வர்மா தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி வருகிறார். இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் போஸ்டர்களும் சரி படத்தில் வைக்கப்படும் டைட்டில்களும் சரி கவர்ச்சி மிகுந்ததாக தான் இருக்கும். அப்படி என்றால் படத்தில் நடிக்கும் நடிகைகளை பற்றி சொல்லவா வேண்டும், பல கிளாமரான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளை இவரது படத்தில் நடிக்க வைத்து அவர்களால் பல சர்ச்சைகளிலும் ராம்கோபால் வர்மா சிக்கிக் கொள்வார். தற்போது முழுநேரமாக பிட்டு படம் எடுக்கும் அளவிற்கு மாறிவிட்டார் இந்த இயக்குனர்.

Also Read : ஷங்கர் பிரமாண்ட படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. சம்பளத்தை கேட்டு ஆடிப் போன தயாரிப்பாளர்

வேலு பிரபாகரன் : நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர் என பன்முக தன்மை கொண்ட வேலுபிரபாகரன் பல திரைப்படங்களை இயக்கி உள்ளார். முன்பெல்லாம் நல்ல படங்களை கொடுத்து வந்த இவர் பின்பு வந்த காலங்களில் தான் எடுக்கும் பல திரைப்படங்களில் கிளாமர் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததால் இவரது படங்கள் அவ்வளவாக ஓடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே. சூர்யா : நடிகர், இயக்குனர் என பன்முக தன்மை வாய்ந்த இவர் அஜித்தின் வாலி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அத்திரைப்படத்தை தொடர்ந்து குஷி திரைப்படத்தில் ஜோதிகாவின் இடுப்பை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் படையெடுத்து திரையரங்கிற்கு வந்தார்கள் என சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த காட்சியை கவர்ச்சியாக இயக்கி இருப்பார் எஸ்.ஜே.சூர்யா அதிலும் கட்டிப்புடிடா பாடலில் மும்தாஜின் முகபாவனையும், நடனமும், எஸ்.ஜே. சூர்யாவை இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்க வைத்த பாடலாகும். இதுபோதாது என அன்பே ஆருயிரே திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்து இயக்கினார். இத்திரைப்படத்தில் நடித்த நடிகை நிலாவின் ஒவ்வொரு காட்சியும் படு கிளாமராகவே அமைந்தது.

Also Read : புது அவதாரம் எடுத்த செல்வராகவன்.. மொத்த கோடம்பாக்கத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்

செல்வராகவன் : செல்வராகவனின் திரைப்படங்களில் கதைக்கு பஞ்சமே இருக்காது. இவர் இயக்கும் திரைப்படங்களில் எடுக்கப்படும் ஒளிப்பதிவுக்கு என தனி ரசிகர்கள் உண்டு. இருந்தாலும் செல்வராகவனின் திரைப்படங்களிலும் கிளாமர் காட்சிகளும் சற்று அதிகம். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ரீமாசென்னின் கிளாமர் காட்சிகளும், புதுப்பேட்டை திரைப்படத்தில் சினேகாவின் கிளாமர் காட்சிகளும், படங்களின் வசூலை அதிகரித்தது எனலாம்.

சந்தோஷ் பி ஜெயக்குமார் : நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு-அறையில்-முரட்டு-குத்து திரைப்படத்தை இயக்கி இணையத்தையே கிறங்கடித்தவர் தான் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அத்திரைப்படத்தில் எழுந்த சர்ச்சைகளையும் மீறி அத்திரைப்படம் திரையரங்கில் நல்ல வசூலை பெற்றது. மேலும் 2020ஆம் ஆண்டு இரண்டாம் குத்து திரைப்படத்தை இயக்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கிளாமர் கவர்ச்சி திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர்களுக்கே டப் கொடுக்கும் இயக்குனராக வலம் வருகிறார்.

சாமி : இயக்குனர் சாமி நல்ல திரைப்படங்களை கொடுத்தாலும் அதில் முக்கியமான அந்தரங்க காட்சிக்கு குறைவில்லாமல் இருக்கும் அதை வைத்து படத்தை வெற்றி பெற வைத்துள்ளார். எடுத்துக்காட்டாக உயிர் படம் அடுத்து மிருகம், சிந்து சமவெளி, இந்த படங்களில் கவர்ச்சிக்கு அந்தரங்க காட்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார் இயக்குனர்.

Also Read : ஒரே படத்தால் 12 வருட கடனில் தவித்த செல்வராகவன்.. 2ம் பாகம் எடுக்காததன் காரணம் இதுதான்

Trending News