வெற்றி இயக்குனர் என்ற பெயரை வாங்குவது எளிது. ஆனால் அதை தக்கவைத்துக்கொள்வது மிகவும் கடினம். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமான மணிரத்னமே ஒரு சில தோல்வி படங்கள் கொடுத்திருக்கும் நிலையில், இந்த 3 இயக்குனர்கள் தோல்வி என்பது என் அகராதியிலே இல்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்கள். இந்த பட்டியலில் முதலில் இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன்
வெற்றிமாறன்: பாலு மகேந்திராவின் செல்ல பிள்ளை வெற்றிமாறன், அவரது ஒவ்வொரு இயக்கத்திலும் தனது ஆசானை பின்பற்றுவார். வெற்றிமாறன் ஒரு படம் எடுக்கிறார் என்றால், நிச்சயம் அந்த படத்தில் ஒரு 50 புத்தகங்களில் கதையாவது இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் நுணுக்கமாக, பல அர்த்தங்கள் பொதிந்து இருக்கும் வகையில் எடுப்பார்.
அதே நேரத்தில் ரசிகர்களை திருப்தி படுத்தவும் தவறமாட்டார். மற்ற இயக்குனர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, இதுவரை அவர் இயக்கிய படங்கள் மிகவும் குறைவு என்றாலும் கூட, எல்லாமே தரமான படங்களாக மட்டும் தான் இருக்கிறது. அதே நேரத்தில், அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வணிக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களாக இருக்கிறது.
முதன் முதலில், அவர் இயக்கிய பொல்லாதவன் படத்தில் தொடங்கி, தற்போது அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் விடுதலை 2 படம் உட்பட அனைத்துமே வெற்றி படங்களாக மட்டும் தான் உள்ளது.
அட்லீ: இந்த லிஸ்டில் இரண்டாவதாக இருப்பது இயக்குனர் அட்லீ. அவரை தமிழில் பலர் காபி என்று கிண்டல் செய்தாலும், ரசிக்கும் விதத்தில் மட்டும் தான் இதுவரை படம் எடுத்து உள்ளார். மேலும் வணிக ரீதியாக அனைத்துமே வெற்றி படங்களாக உள்ளது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்துவிட்டு, முதன் முத்தலாக் சொந்தமாக அவர் இயக்கிய படம் தான் ராஜா ராணி.
மௌன ராகம் படத்தின் கதையை தழுவி எடுத்திருந்தாலும், படம் வேற லெவல் ஹிட் ஆகி ரசிகர்களிடம் இவருக்கு தனி இடத்தை பிடித்து கொடுத்தது. இதை தொடர்ந்து, தனது அடுத்த ப்ரொஜெக்ட்டை விஜயை வைத்து எடுத்தார். தொடர்ந்து விஜயை வைத்து 3 படம் எடுத்து வேற லெவல் ஹிட் கொடுத்தார். இதை தொடர்ந்து பாலிவுட் சென்ற அட்லீ ஆயிரம் கோடி வசூல் கொடுத்து பாலிவுட்டில் மோசட் வான்டெட் இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெற்றார்.
லோகேஷ் கனகராஜ்: தமிழ் திரையுலகத்தில் திருப்புமுனை கொண்டுவந்த இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் முக்கியமான ஒருவர். இவர் ஒரு Self-made இயக்குனராக உள்ளார். இவர் எடுத்த முதல் படமே இவருக்கு பெருமளவில் வரவேற்பை பெற்று கொடுத்தது. மாநகரம் படத்தின் மூலம் தனது அடையாளத்தை குறித்த லோகேஷ் கனகராஜ் கைதி படத்தின் மூலம் பெருமளவில் audience- ஐ இவருக்கு என்று கொண்டு வந்தார்.
தொடர்ந்து இவர் விஜயை வைத்து எடுத்த மாஸ்டர், விக்ரம், லியோ என்று எல்லாமே வேற லெவல் ஹிட் அடித்தது. இவருக்கு என்று ஒரு யூனிவெர்ஸ் உருவாக்கி, அதை ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அடுத்ததாக இவர் இயக்கத்தில் வெளியாகும் படம் கூலி.