புதன்கிழமை, நவம்பர் 20, 2024

2ஆம் பாகத்தால் ஷங்கரை போல் மோசம் போன 6 இயக்குனர்கள்.. சமுத்திரகனியை சூனியம் வச்சு பழி தீர்த்த படங்கள்

முதல் பாகத்தை நம்பி இரண்டாம் பாகம் எடுத்து தான் சம்பாதித்த மொத்த பெயரையும் கோட்டை விட்ட இயக்குனர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படம் ஷங்கர் சம்பாதித்த பெயருக்கெல்லாம் பங்கம் ஏற்படுத்தியது. ஷங்கரைப் போல இதற்கு முன் பெயரை தொலைத்த 6 இயக்குனர்கள்.

லிங்குசாமி: 2005 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படம் நடிகர் விஷாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ரஜினி முதல் கமல் வரை அனைவரும் இந்த படத்தை பார்த்துவிட்டு லிங்குசாமியை பாராட்டி தள்ளினார்கள். 2018ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளிவந்து படு மொக்கை வாங்கியது.

சமுத்திரக்கனி: 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் படத்தின் முதல் பாகம் சக்க போடு போட்டது. உண்மை கதைகளை கையாளும் சமுத்திரக்கனி அதன் இரண்டாம் பாகத்திற்கு ஆசைப்பட்டு மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார். 2020இல் வெளிவந்த இந்த படம் தோல்வியை சந்தித்தது. அதைப்போல் அப்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் மோசம் போனார்

பி வாசு: ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் பி. வாசுக்கு பெரிய அடியாக அமைந்தது. 60 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் அதில் பாதி கூட வசூலிக்கவில்லை. இந்த படத்தால் லைக்கா நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது

அர்ஜுன்: அர்ஜுன் நடித்து இயக்கிய ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகம் அளவிற்கு போகவில்லை. இந்த படம் அர்ஜுனுக்கு பெரிய அடியாய் அமைந்தது. ஜெய்ஹிந்த் இரண்டாம் பாகத்திற்கு பிறகு அவர் படம் இயக்குவதையே நிறுத்திவிட்டார்.

கே வி ஆனந்த்: நடிகர் ஜீவா கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் கோ. 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. இதை நம்பி இதன் இரண்டாம் பாகத்தை பாபி சிம்ஹாவை வைத்து எடுத்து மோசம் போனார்
கே வி ஆனந்த்.

உறியடி விஜயகுமார்: இளசு முதல் பெருசு வரை தன்னுடைய உரியடி படத்தால் கவர்ந்து விட்டார் இயக்குனர் விஜயகுமார். தான் இயக்கி நடித்த உறியடி படத்தின் முதல் பாகம் சக்க போடு போட்டது. அதன் பின் 2019இல் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆசைப்பட்டு கோட்டை விட்டார் விஜயகுமார்.

- Advertisement -spot_img

Trending News