செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விக்ரமெல்லாம் ஒரு நடிகரே கிடையாது.. பேட்டியில் தரக்குறைவாக பேசிய இயக்குனர்

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜகுமாரன் தமிழில் நீவருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

அதோடு கடுகு உள்ளிட்ட திரைப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விக்ரமை பற்றிய சில தகவல்களை மிகவும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதாவது இவர் இயக்கத்தில் வெளியான விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தில் சரத்குமார், விக்ரம், தேவயானி, குஷ்பூ உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

குடும்பங்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் இந்த படம் தனக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் விக்ரம் ஒரு முறை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதைப் பற்றி பேசிய ராஜகுமாரன் சூரியவம்சம் திரைப்படம் போன்றே இந்த திரைப்படமும் குடும்பங்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்தது.

ஆனால் விக்ரம் ஏன் அப்படி கூறினார் என்று தெரியவில்லை. சேது படம்தான் அவரை பிரபலமாக்கியது என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது உண்மை அல்ல இந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் தான் ஃபேமிலி ஆடியன்ஸ் இடம் அவரை கொண்டு போய் சேர்த்தது. சும்மா கை, கால்களை இழுத்து கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு நடந்து செல்வது போன்று நடித்து விட்டால் அவர் சிறந்த நடிகர் கிடையாது.

டயலாக் இல்லாத காட்சிகளில்கூட டைரக்டர் கட் சொல்லும் வரை பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிப்பதுதான் நடிப்பு. அது விக்ரமிடம் நிச்சயமாக கிடையாது. அவரால் ஒன்று கமல்ஹாசன் போல நடிக்க முடியும். இல்லை என்றால் ரஜினி போல் நடிக்க முடியும்.

இது இரண்டையும் விட்டால் அவருக்கு நடிக்க தெரியாது. அதை நான் என் படத்தில் சில முறை கவனித்திருக்கிறேன். மேலும் விக்ரமை நல்ல நடிகர் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தன்னுடைய கருத்தை மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Trending News