வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய் டிவியின் சொம்புகளுக்கு ஏற்படப்போகும் ஏமாற்றம்.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது யார் தெரியுமா?

Vijay Tv Bigg Boss 8 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவா வேண்டாமா என்று ரெண்டு கிட்ட நிலைமையில் தான் மக்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் ஒரு பக்கம் சண்டை சச்சரவுகள் ஒவ்வொருவருடைய போட்டியாளர்களுடன் உண்மையான முகமூடி என்ன என்பதை பார்க்க தூண்டும் வகையில் இருக்கும். இன்னொரு பக்கம் இதெல்லாம் பார்த்து நம் நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்று தோன்றும் அளவிற்கு கொஞ்சம் வெறுப்பாகவும் இருக்கும்.

ஆனாலும் பார்க்க வேண்டாம் என்று நினைத்தாலும் விஜய் டிவியில் போடுகிற ப்ரோமோவை பார்த்ததும் அப்படி என்னதான் இருக்கு யாருக்கு சண்டை மோதுகிறது என்பதை பார்க்கலாம் என்பதை தூண்டி விடுகிறது. அந்த வகையில் உள்ளே இருக்கும் 18 போட்டியாளர்களில் திடீரென்று சச்சனா வெளியேறினார். ஆனால் இன்று மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சர்ப்ரைஸாக சச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் போய்விட்டார்.

போனதும் வெளியே பார்த்ததை வைத்து யார் எனக்கு லீஸ்ட் ஆக தெரிகிறார்கள் என்று சொல்லும் வகையில் மூன்று பேரை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அதில் ரஞ்சித், விஷால், சத்தியா என்று சொல்லி இருக்கிறார். இதனை எடுத்து நாளைக்கு வரப் போகிற வீக்கண்டு நிகழ்ச்சிக்காக மக்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இந்த வாரத்தில் நடந்து முடிந்த விஷயங்களை எப்படி விஜய் சேதுபதி அவருடைய பாணியில் கொண்டு போகப் போகிறார் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்.

bigg boss voting
bigg boss voting

இதற்கிடையில் இந்த வாரம் நாமினேசன் லிஸ்டில் முத்துக்குமார், சௌந்தர்யா, ரவீந்தர், ரஞ்சித், அருண் பிரசாத் மற்றும் ஜாக்குலின் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் ரஞ்சித், அருண், ஜாக்லின் விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர்கள். இவர்களை அடுத்து ரவீந்திர பத்தி சொல்ல வேண்டாம் வெளியில் இருந்து ஒவ்வொருவருக்கும் ரிவ்யூ கொடுத்துட்டு வந்தார்.

அந்த வகையில் இவர்களுக்கு மக்களின் ஓட்டு அதிகமாக கிடைத்து விடும் என்று ஒரு சலசலப்பு இருந்தது. ஆனால் அதையெல்லாம் பொய் விஜய் டிவி சொம்புகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்வதற்கு ஏற்ப ஜாக்லின், அருண், ரஞ்சித், ரவீந்தர் இவர்கள்தான் ஓட்டிங் லிஸ்டில் கடைசியாக இருக்கிறார்கள். அந்த வகையில் ஜாக்லின் தான் கடைசி மதிப்பெண்களை எடுத்து இந்த வாரத்தில் வெளியேறப் போகிறார் என்று கருத்துக்கணிப்பு சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் அவ்வளவு சீக்கிரமாக ஜாக்குலினை விஜய் டிவி வெளியே அனுப்ப மாட்டார்கள். அதனால் ரவீந்திரன் உடல்நிலை குறித்து ஒருவேளை ரவீந்தர் போக வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றால் கொஞ்சம் அமைதியாக இருக்கும் அருண் வைத்து பெருசாக சலசலப்பு எதுவும் இல்லாததால் இவரை அனுப்பவும் வாய்ப்பு இருக்கிறது.

Trending News