திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

லிப்லாக், ஆணு**ப்பு கேக் வெட்டிய புகைப்படம்.. அருவருப்பாக பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தான் அறிமுகமான 7ஆம் அறிவு படத்திலேயே நல்ல பெயர் பெற்றார். பின்னர் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பிசியான நடிகையாக வலம் வந்தார். சிறிதுகாலம் நடிப்பில் இருந்து விலகி இசை கச்சேரிகள் நடத்தி வந்தார். தற்போது தெலுங்கு படங்களில் மீண்டும் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் கொஞ்ச நாட்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. அண்மையில் தன்னுடைய காதலன் பிறந்தநாளை கொண்டாடிய அவர், அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில் ஒரு வீடியோவில் தனக்கு கேக் ஊட்டிய காதலனுக்கு லிப்லாக் அடித்து பகீர் கிளப்பியுள்ளார். மேலும், அவர்கள் வெட்டி, கொண்டாடிய கேக்கில் ஆணுறுப்பு போன்ற ஓவியம் இருப்பதை பார்த்த ரசிகர்கள் இது என்ன கண்றாவி என புலம்பி வருகின்றனர். இதனை பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஸ்ருதியிடம் பேட்டியில் நீண்ட நாட்களாக காதலித்து வரும் நீங்கள் எப்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறீர்கள் என கேட்டதற்கு அவர் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்து விலகிச் சென்றுள்ளார். அதே கேள்வியை சாந்தனுவிடம் கேட்ட போது, நாங்கள் இப்போது தான் டேட்டிங் செய்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.

மேலும் சாந்தனு கூறுகையில், ஸ்ருதி நடிகை என்பதை விட ஒரு நல்ல இசைக்கலைஞர். இசை தான் எங்களை ஒன்றிணைத்தது. இசையுடன், ஆடை வடிவமைப்பில் இருவரும் ஈடுபட்டு வருகிறோம், இந்த இரண்டும் எங்களது ஆக்கபூர்வமான பயணம். திருமணத்தை விட இதில் தான் தீவிரமாக இருவரும் கவனம் செலுத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

shuruthi-haasan-cake-cutting
shuruthi-haasan-cake-cutting

ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸுடன் சலார் திரைப்படம், பாலகிருஷ்ணா மற்றும் சீரஞ்சிவியின் அடுத்த படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Trending News