செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாரிசு 210 கோடி வசூலா? வடிகட்டின பொய்.. கொந்தளித்து விநியோஸ்தர் அளித்த பதிலடி

நடிகர் விஜய் நடிப்பில் ஜனவரி 11 ஆம் தேதி உலமெங்கும் உள்ள பல திரையரங்குகளில் ரிலீசான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவான இப்படத்தை தில் ராஜு தயாரித்தார். ராஷ்மிகா மந்தனா,பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் குடும்ப பாங்கான கதையில் உருவாகியுள்ளது.

இதனிடையே திரையரங்குகளில் குடும்பத்துடன் சென்று ரசிகர்கள் பார்க்கும் வண்ணம் படம் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. வாரிசு படத்தின் ரிலீசன்றே, அஜித்தின் துணிவு படமும் ரிலீசான நிலையில், வாரிசு படத்தை காட்டிலும் துணிவு படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். ஆக்ஷன் மாஸ் காட்சிகளுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணிவு படம் உள்ளதால், ரசிகர்கள் துணிவு படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Also Read: வசூல் ரீதியான வெற்றி யாருக்கு.. வாரிசு vs துணிவு, உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்

இதன் காரணமாக துணிவு படத்தின் வசூல் முதல் நாளிலே தமிழகத்தில் மட்டும் 24.50 கோடி வரை அள்ளிக்குவித்தது. மேலும் மூன்றாவது நாளில் 100 கோடியை எட்டியது.ஆனால் விஜயின் வாரிசு படம் 70 கோடி மட்டுமே வசூலை எட்டிய நிலையில், துணிவு படமே இந்த போட்டியில் வென்றதாக அறிவிக்கபட்டது. இதன் காரணமாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வாரிசு படத்தின் 7 நாள் வசூல் மட்டுமே உலகமெங்கும் 210 கோடி என செய்திகள் உலா வந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பலரும், எப்படி இவ்வளவு கோடி சாத்தியம் என கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர். இதற்கு பதில் தரும் வகையில் திரையரங்கு விநியோஸ்தர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், அதிரடியாக பேட்டி ஒன்றை கொடுத்தார். அதில் வாரிசு படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை 7 ஸ்கிறீன் ஸ்டியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் லலித் குமார் வாங்கியிருந்தார்.

Also Read: வாரிசு ரெட் ஜெயன்ட்யிடம் போக காரணம்.. விஜய்யை அடிபணிய வைத்த உதயநிதி

ஆனால் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஓவர்சீஸ் உள்ளிட்ட திரையரங்கு உரிமையை வெவ்வேறு நிறுவனங்கள் வாங்கி வெளியிட்டது. இருந்தாலும் வாரிசு படம் 210 கோடி வசூல் ஈட்டியுள்ளது என்பது 200 சதவிகிதம் சாத்தியமில்லாதது என அவர் தெரிவித்தார்.படத்தின் உண்மையான வசூல் என்ன என்பது அறிய சில காலங்களாகும் எனவும் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தற்போது இவரது பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், படத்தின் தோல்வியை மறைப்பதற்கு தயாரிப்பாளர் தில் ராஜு இதுபோன்று இஷ்டப்படி வசூலை அதிகரித்து அறிவித்து வருவதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ வாரிசு விஜய் படம் என்பதால் 200 கோடி வசூல் என்பது சாத்தியமானது எனவும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: சொந்த ஊரில் சோடைப்போன தில் ராஜு.. வாரிசு படத்தால் ஏற்பட்ட அவமானம்

Trending News