Pawan kalyan: நடிகர் பவன் கல்யாண் ஆந்திராவில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அத்துடன் திரைப்பட தயாரிப்பாளராகவும் அரசியல்வாதியாகவும் வெற்றி நடை போட்டு வருகிறார். மேலும் ஜனசேனா கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்று வருகிறார். அப்படிப்பட்ட இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் ஜனசேனா கட்சியில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி பெற்றிருக்கிறார்.
பவன் கல்யாண் முன்னாள் மனைவி எடுத்த அதிரடி முடிவு
இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது மாபெரும் வெற்றி பெற்றதால் அதை கொண்டாடும் வகையில் இவருடைய மூன்றாவது மனைவி ஆரத்தி எடுத்து மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் நந்தினி என்பவரை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த பிறகு 2008 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்கள். ஆனால் அதற்கு ஜீவனாம்சமாக 5 கோடி பவனிடமிருந்து வாங்கிக் கொண்டார்.
அடுத்து விவாகரத்து ஆன நிலையில் நடிகை ரேணு தேசாய் என்பருடன் காதல் வலையில் விழுந்தார். பிறகு 2009 ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. அடுத்து இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அடுத்து இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து மூன்றாவதாக பவன் கல்யாண் அன்னா லெஷ்னேவை கல்யாணம் பண்ணிக் கொண்டார்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தையும் சேர்த்து இவர்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகளுடன் இருக்கிறார்கள். தற்போது அரசியலில் வெற்றி பெற்ற சந்தோஷத்துடன் இருக்கும் பவன் கல்யாண் இரண்டாவது மனைவியான ரேணு தேசா இப்பொழுது அதிரடியாக ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்.
அதாவது இவர் தமிழில் ஜேம்ஸ் பாண்ட் என்னும் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அத்துடன் தெலுங்கிலும் பல வெற்றி படங்களை கொடுத்து பத்ரி படத்தின் மூலம் பவன் கல்யாணத்துக்கு இவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் கல்யாணம் செய்து கொண்டார்கள். அந்த வகையில் ஒரு மகள் மற்றும் மகன் அகிரா நந்தன் என இரண்டு குழந்தைகள் பிறந்தது.
குழந்தைகள் பெற்ற கொஞ்ச நாளிலேயே இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பின் நடிகை ரேணு தேசாய் குழந்தைகளை தனியாக விட்டுட்டு வேற கல்யாணம் பண்ண முடியாது என்பதற்காக இத்தனை வருட காலமாக குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்ந்து வந்தார். அந்த வகையில் தற்போது பவன் கல்யாண் அரசியலில் மாபெரும் வெற்றியை பார்த்ததால் அந்த சந்தோசத்தில் இரண்டாவது திருமணத்திற்கு தூண்டில் போட்டு விட்டார்.
அதாவது ரேணு தேசாய் மகன் மற்றும் மகள்கள் பெரிய பசங்களாக வளர்ந்து விட்டதால், இனி அவர்களே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதனால் எனக்கான துணையைத் தேடி இல்லற வாழ்க்கையில் இணைய போவதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பவன் கல்யாண் தற்போது வெற்றி பெற்ற கையுடன் இவருடைய மகனையும் சேர்த்துக்கொண்டு அனைத்து இடங்களுக்கும் கூட்டிட்டு போவதால் இனி அவரைப் பற்றி கவலை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
அதனால் எனக்கான ஒரு வாழ்க்கை வேண்டும், தனியாக இருக்க முடியாது எல்லாத்தையும் அனுப்பி வைக்க வேண்டும் என்பதால் இன்னும் ஒரு சில மாதங்களிலே என்னுடைய கல்யாணம் நிச்சயம் நடக்கும் என்பதை ஓபன் ஆக பேசி இருக்கிறார். அந்த வகையில் தற்போது ரேணு தேசாவிற்கு 42 வயது இருக்கும் நிலையில் இன்னும் அடுத்த வருடத்திற்குள் இல்லற வாழ்க்கையில் நுழைந்து விடுவார்.