வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய 5 பிரபலங்களின் விவாகரத்து.. சமந்தாவை விட ஷாக் கொடுத்த பிசின் நடிகை

5 Famous Celebrities Divorced Recently: விவாகரத்து என்பது இப்போது உள்ள காலகட்டத்திற்கு சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. ஆனால் சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்தி மட்டும் இணையத்தில் மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஐந்து பிரபலங்களின் விவாகரத்து செய்தியை இப்போது இந்த பதிவில் காணலாம்.

சமந்தா, நாக சைதன்யா : முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சமந்தா பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017இல் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் 2021 இல் சமந்தா விவாகரத்து செய்தி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read : இப்போ சமந்தா, தமன்னா ஆட்டத்தை அப்போதே ஆடிய ராஜமாதா.. ரசிகர்களை இன்றுவரை கிறங்கடிக்கும் பாடல்

தனுஷ், ஐஸ்வர்யா : ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் தனுஷ் உச்சத்தை தொட்டார். இந்நிலையில் கடந்த வருடம் இவர்களது விவாகரத்து செய்தி இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியது. கிட்டத்தட்ட 18 வருட திருமண வாழ்க்கையை இருவரும் முடித்துக் கொண்டனர்.

இமான், மோனிகா ரிச்சர்ட் : பிரபல இசையமைப்பாளரான இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களது 13 வருட திருமண வாழ்க்கை முடிந்து விட்டதாக கடந்த வருடம் இமான் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி இமான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

Also Read : மற்ற பிரபலங்களின் படங்களுக்கு பாடி கொடுத்த 5 நடிகர், நடிகைகள்.. கார்த்தியை தூக்கிவிட்டு அழகு பார்த்த தனுஷ்

பாலா, முத்து மலர் : பிரபல இயக்குனரான பாலா முத்துமலர் என்பவரை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்த சூழலில் கடந்த வருடம் பாலா மற்றும் முத்துமலர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதனால் இவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அசின், ராகுல் ஷர்மா : பிரபல நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார். இந்த சூழலில் தனது 7 வருட திருமண வாழ்க்கையை அசின் முடித்துக் கொள்ள போகிறாராம். இதன் முதல் கட்டமாக தனது சமூக வலைத்தளத்தில் திருமண புகைப்படங்களை அசின் நீக்கி இருக்கிறார்.

Also Read : விருப்பம் இல்லாமல் அசின் ரிஜெக்ட் செய்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. சூர்யாவுடன் நடிக்க மறுத்த காரணம்

Trending News