மார்க்கெட் குறைந்துவிட்டாலே நடிகைகள் பலரும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவார்கள். ஆனால் புகழின் உச்சியில் இருக்கும் போதே வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டவர் தான் இந்த நடிகை. நடிப்பு, டான்ஸ் என தன் திறமையால் வெற்றி கண்ட நடிகைக்கு திருமண வாழ்வு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
அதிலும் கல்யாணம் செய்த ஒரு வருடத்திலேயே தன் கணவரை விவாகரத்து செய்து பலருக்கும் ஷாக் கொடுத்தார் இந்த நடிகை. வெளிநாட்டில் ராஜபோக வாழ்வை வாழ்ந்தும் நடிகை எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்று பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் உண்மையில் நடிகையின் சீக்ரெட் ஒன்று கணவருக்கு தெரிந்ததால் தான் இந்த விவாகரத்தே நடந்ததாம்.
Also read: லிவிங் ரிலேஷன்ஷிப்பிற்கு சம்மதித்த அம்மா.. திருமணத்திற்கு முன்பே ஒரே வீட்டில் வாழும் பிக்பாஸ் ஜோடி
அதாவது நடிகை சினிமாவில் பிசியாக இருந்த சமயத்திலேயே முக்கிய பிரபலம் ஒருவருடன் இவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது. இது மீடியாவில் கூட கிசுகிசுவாக வெளிவந்தது. ஆனால் திருமணம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கட்டாயப்படுத்தியதால் தான் நடிகை தொழிலதிபரை மணந்திருக்கிறார்.
இருப்பினும் இந்த அந்தரங்க விஷயம் கணவருக்கு தெரிந்ததால் சுவற்றில் அடித்த பந்து போல் ஆகி இருக்கிறது நடிகையின் நிலைமை. அதன் பிறகு அவர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் முன்பு போல வாய்ப்புகள் எதுவும் அவரை தேடி வரவில்லை. அதனால் கிடைத்த கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அதைத்தொடர்ந்து சின்ன திரையில் கூட இவர் நடிக்க தொடங்கினார். இது ஒரு புறம் இருந்தாலும் அந்த பிரபலத்துடன் இருந்த உறவையும் இவர் தொடர்ந்து இருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த உறவும் முறிந்து போய் இருக்கிறது. தற்போது நடிப்பிலிருந்து விலகி இருக்கும் அந்த நடிகை ரொம்பவும் சாதாரணமாக தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்.
Also read: அர்த்த ராத்திரியில் நடிகையை தேடி வரும் நடிகர்.. எல்லை மீறிய அந்தரங்க உறவால் பதறிய அம்மா