சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

டூ பீஸில் கவர்ச்சி காட்டியும் பிரயோஜனம் இல்ல.. இயக்குனருக்கு ஆபர் கொடுத்து, ஆசை காட்டும் திவ்யபாரதி

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த வருடம் பேச்சுலர் திரைப்படம் வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருந்தார். இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் அவர் அதிக கிளாமராக நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

அதுமட்டுமல்லாமல் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று முன்னணி இடத்தை பிடிப்பதற்காக இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

அதற்கு பலனாக இவருக்கு தற்போது சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இதனால் இவருக்கு போட்டியாக கவர்ச்சி காட்டியே வாய்ப்பை வாங்கிவிடலாம் என்று நினைக்கும் பல இளம் நடிகைகளும் தற்போது தங்கள் சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை தாராளமாக பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் திவ்யபாரதி தற்போது தனக்கு வரும் பட வாய்ப்புகளை இன்னும் அதிகப்படுத்துவதற்காக ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார். அது என்னவென்றால் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் அவர் அடுத்த படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொள்வதாக ஆசை காட்டி அல்லது ஆபர் கொடுத்து வருகிறாராம்.

இதன் மூலம் தனக்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதுதான் அவரின் திட்டமாம். இதனால்தான் அவருக்கு சினிமாவில் படவாய்ப்புகள் மளமளவென குவிந்து வருவதாக அனைவரும் பேசி வருகின்றனர். ஆனாலும் சிலர் சம்பளத்தை இப்படி குறைத்துக் கொண்டால் எப்படி கல்லா கட்ட முடியும் என்றும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதற்கு அவர் இப்படி சம்பளத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் எனக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும் அதன் மூலம் எனக்கு காசும் அதிகமாக வரும். நான் நன்றாக நடிக்கிறேன் என்ற பெயரும் எனக்கு இருப்பதால் போகப்போக தயாரிப்பாளர்களே என் சம்பளத்தை அதிகப்படுத்திக் தருவார்கள் என்று அசால்டாக கூறுகிறாராம்.

divya-bharathi
divya-bharathi

இப்படி பலமான திட்டத்துடன் சினிமாவில் களம் இறங்கியுள்ள திவ்ய பாரதியை மற்ற நடிகைகள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். எது எப்படியோ காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது இவர் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது என்று தற்போது கோலிவுட்டில் பேசி வருகின்றனர்.

Trending News