புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விவாகரத்திற்கான காரணத்தை கூறிய திவ்யதர்ஷினி.. 2ம் திருமணத்திற்கு கூறிய பதில் என்ன தெரியுமா?

Anchor Divyadarshini: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது பெரிய விருது வழங்கும் நிகழ்ச்சி, முன்னணி பிரபலங்களின் பேட்டி என்றால் அதில் டிடி தான் தொகுப்பாளனியாக இருந்து வருகிறார். இதற்கு காரணம் ஒரு நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாகவும், கலகலப்புடனும் எடுத்துச் செல்வதில் டிடி மிகவும் கை தேர்ந்தவர்.

அதோடு மட்டுமல்லாமல் சினிமா ஒருபுறம் என்றாலும் படிப்பையும் கைவிடாமல் நன்றாக படித்து பகுதி நேர ஆசிரியராக கல்லூரியிலும் பணியாற்றி இருக்கிறார். பல திறமைகளை உள்ளடக்கிய டிடி இப்போது பெரும் புகழுடன் இருக்கிறார். அவருடைய திருமண வாழ்க்கை ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.

Also Read : முறிந்து போன விஜய் டிவியின் காதல் ஜோடி.. ஓவரா போட்ட ஆட்டத்தால் செஞ்சி விட்ட காதலன்

ஆனாலும் மனம் தளராத டிடி தற்போது தொடர்ந்து தன்னுடைய வேலையை படு ஜோராக செய்து வருகிறார். டிடி மற்றும் அவரது அக்கா பிரியதர்ஷினி இருவரும் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தனர். பிரியதர்ஷினி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான்.

இந்த பேட்டியில் தங்களது அப்பாவை பற்றி மலரும் நினைவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் டிடியின் திருமண வாழ்க்கை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய டிடி 10 வருடங்களுக்கு முன்பு திருமணத்தைப் பற்றிய என்னுடைய எண்ணம் வேறு விதமாக இருந்தது.

Also Read : உடல் சுகத்திற்காக கல்யாணம் செய்து கழட்டிவிட்ட விஜய் டிவி நடிகை.. எல்லை மீறிய பயில்வான்

ஆனால் இப்போது என்னுடைய பார்வை முற்றிலும் வேறு. திருமணம் செய்தால் தான் சாதனை செய்தது போன்றெல்லாம் சொல்ல முடியாது. திருமணம் என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறியிருந்தார். மேலும் டிடி இவ்வாறு தனிமையில் இருப்பதால் அவரது அம்மா மற்றும் குடும்பம் எவ்வாறு பார்க்கிறார்கள் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டு இருந்தார்.

இப்போது உள்ள காலகட்டத்திற்கு போல் தான் என்னுடைய குடும்பம் யோசித்து வருகிறார்கள். என் தம்பி வெளிநாட்டில் இருக்கிறான் இங்கு என்ன நடக்கிறது என்று அவனுக்கு தெரியாது. அதேபோல் என்னுடைய அக்கா பிரியதர்ஷினிக்கும் என்னை பற்றி நன்கு தெரியும். அதோடு மட்டுமல்லாமல் மறுமணம் செய்ய தனக்கு விருப்பம் இல்லை என்று தான் டிடி கூறி இருக்கிறார்.

Also Read : வித்தியாசமான டைட்டிலுடன் முதல் முறையாக ஹீரோவான விஜய் டிவி புகழ்.. யோகி பாபுவை தொட்டுருவாரு போல

Trending News