செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு கோட் படம் ரிலீஸ் ஆகிறது. கிட்டத்தட்ட 900 திரையரங்கங்களுக்கு மேல் இந்த படத்தை வெளியிடுகின்றனர்.இந்நிலையில் இந்த படத்துக்கு எதிராக திமுகவினர் பலவிதமான தடைகளை போட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த படம் ட்ரைலர் வெளியிடும்போது திமுக தரப்பு பல முட்டுக்கட்டைகள் போட்டது.
இப்பொழுது இந்த படத்திற்கு எந்த வித பேனர்களும் வைக்க கூடாது. சொன்ன நேரத்தில் தான் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டும். ஒவ்வொரு தியேட்டர்களிலும் குறிப்பிட்ட அளவு போலீஸ் பாதுகாப்பு இருந்தால்தான் படத்தை திரையிடுவதற்கு அனுமதி கொடுக்கப்படும் என ஆளுங்கட்சி தரப்பில் பல தடைகளை போட்டு வருகின்றனர்.
திமுக செய்யும் ஓவர் அராஜகம்
ஒவ்வொரு தியேட்டர்களுக்காக சென்று தியேட்டரில் பேனர் வைப்பதற்கு உண்டான பலகைகளை அகற்றி உள்ளார்கள. வெளியில் பேனர்கள் வைத்தால் சில இடையூறுகள் விளைவிக்கும் என்பதால் கூட அதை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் தியேட்டர் வளாகத்திற்கு உள்ளேயும் சென்று பேனர் வைக்கும் ஸ்டாண்டுகளை அகற்றி உள்ளனர்.
விஜய் கட்சி கொடி அறிவித்துவிட்டார். அடுத்தபடியாக திமுகவுடன் தான் நேரடியாக மோதுவார் என இப்பொழுது இருந்தே கட்சி தரப்பில் பல தடைக்கர்களை விஜய்க்கு எதிராக போட்டு வருகின்றனர். ஏற்கனவே திமுக தரப்பு கொடுக்கும் பல பிரச்சினைகளினால் விஜய்யின் அரசியல் மாநாடு தள்ளி போகிறது.
இப்படி ஆளுங்கட்சியினர் பிரச்சினை கொடுப்பார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்த விஜய் தரப்பு இதனை எல்லாம் கண்டுகொள்ளாதது போல் இருந்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக 900 தியேட்டர்கள் கிடைத்து விட்டதால் போதும் என்று இருக்கின்றனர்.