திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

படம் பார்க்க மட்டும் நாங்கள் வேண்டுமா.? ஏமாற்றத்தைக் கொடுத்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இப்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 169 படமான ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த வயதிலும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ரஜினி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரஜினி நடிப்பில் வெளியான பாபா படத்தின் ரீமேக் இன்று திரையிடப்பட்டது. மேலும் இன்று சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.

Also Read : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கடைசி ஹிந்தி படம்.. படையப்பா பாணியில் ஹாட்ரிக் வெற்றி

ஆனாலும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டின் முன் கூடியுள்ளனர். தலைவரைப் பார்த்துவிட்டு தான் செல்ல வேண்டும் என்று அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். அப்போது வெளியில் வந்த லதா ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.

அதாவது சூப்பர் ஸ்டார் ஊரில் இல்லை என்றும் ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் இங்கு வந்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இன்று பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் வருவார்கள் என்பது நிச்சயம் ரஜினிக்கு தெரியும்.

Also Read : வீடு தேடி வந்த நடிகை.. வாரி கொடுத்து காப்பாற்றிய ரஜினிகாந்த்

ஆனாலும் ரசிகர்களை ரஜினி ஏமாற்றியதற்கான காரணம் என்ன என்பதை தெரியவில்லை. ஆகையால் தற்போது ரஜினி ரசிகர்கள் தலைவரை பார்க்க முடியவில்லை என்று சோகத்தில் உள்ளனர். மேலும் ரசிகர்களால் தான் ஹீரோக்களின் படங்கள் வசூல் வேட்டை ஆடுகிறது.

இவ்வாறு தங்களது படங்களை பிரமோஷன் செய்ய, மக்களுக்கு கொண்டு செல்ல மட்டும் ரசிகர்கள் தேவை. ஆனால் இன்று ரஜினி அவரது ரசிகர்களை மழையில் காக்க வைத்து ஏமாற்றத்தை தந்துள்ளார். அதுமட்டுமின்றி படம் பார்க்க மட்டும் தான் ரசிகர்கள் வேண்டுமா என ரஜினிக்கு எதிராக சிலர் பேசி வருகிறார்கள்.

Also Read : ஜெயிச்சவங்க மட்டும் தான் ரஜினியோட கூட்டணி போட முடியும்.. சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா?

Trending News