வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்-ஷாலினியின் 23 வருட உறவு எப்படிப்பட்டது தெரியுமா.? பல ரகசியத்தை உடைத்த மச்சினிச்சி

கோலிவுட்டில் நட்சத்திர தம்பதியர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் அஜித்- ஷாலினி இருவரும் நாளை தங்களது 23வது திருமண நாள் விழாவை கொண்டாட உள்ளனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக ஷாலினி தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் கன்னத்தோடு கன்னம் வைத்து அவர் எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டு, ரசிகர்களுக்கு இனிப்பு கொடுத்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக இவர்களுடைய 23 வருட உறவு எப்படிப்பட்டது என்பது குறித்த சீக்ரெட்டை அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி சமீபத்திய பேட்டியில் உடைத்துக் கூறியுள்ளார். அஜித்- ஷாலினி இருவருக்கும் இடையேயான ரிலேஷன்ஷிப்பில் ஒருவர் மற்றவருக்கு வேண்டிய அளவுக்கு சுகந்திரத்தை கொடுப்பார்கள்.

Also Read: அஜித் மச்சினிச்சிக்கு இப்படி ஒரு திறமையா.? வியக்க வைக்கும் ஷாமிலி புகைப்படங்கள்

அதிலும் அஜித் தன்னுடைய பார்ட்னருக்கு வேண்டிய அளவுக்கு ஃப்ரீடம் கொடுத்து மிகவும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எப்போதுமே உறுதியாக இருப்பவர். இதைத்தான் ஷாலினி மற்றும் அஜித் இருவரிடமும் நான் சிறுவயதில் இருந்தே பாடமாக கற்றுக் கொண்டேன்.

ஏனென்றால் அதுதான் எந்த ஒரு உறவிற்கும் முக்கியமானது. அதை இருவரும் சரியாகப் புரிந்து வைத்துக் கொண்டதால் தான் 23 வருட திருமண வாழ்க்கையில் எந்தவித கசப்பும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அத்துடன் அஜித்திடம் தனக்கு மிகவும் பிடித்தமானது என்ன என்பதையும் ஷாலினி அந்த பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Also Read: அஜித்துடன் நடித்துள்ள மச்சினிச்சி.. இத்தனை நாளா இது தெரியாம போச்சே

நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்தமான விஷயங்களிலும் எந்தவித காம்ப்ரமைசும் பண்ணாமல் அதை செய்து கொண்டிருக்கிறார். அதிலும் கார் மற்றும் பைக் ரேசிங், ஏரோநாட்டிக்கல், குக்கிங், போட்டோகிராபர் என தனக்கு பிடித்தமான விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்கிறார்.

இவை எல்லாம் தான் அஜித்திடம் தனக்கு பிடித்தமான விஷயம் என்று அவருடைய மச்சினிச்சி ஷாமிலி சமீபத்திய பேட்டி தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. மேலும் நாளை திருமண நாளை கொண்டாடும் அஜித்- ஷாலினி இருவருக்கும் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் இப்போதிலிருந்தே தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறனர்.

Also Read: அழகு இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாததால் காணாமல் போன 5 வாரிசு நடிகைகள்.. அஜித் மச்சினிக்கு அமையாத பட வாய்ப்பு

Trending News