புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லோகேஷின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு தெரியுமா?. நாலா பக்கத்திலும் இருந்து கொட்டும் பணமழை

Lokesh in Net worth: தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களின் ஃபேவரிட் இயக்குனராக இருப்பது லோகேஷ். அதற்கு காரணம் இவருடைய கதையும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை எப்படி அள்ளுவது என்ற ராஜதந்திரமும் இருப்பதினால் தான். அதனால் தான் தற்போது ட்ரெண்டிங் இயக்குனர் என்ற இடத்தை பிடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு என்னவென்று தற்போது பார்க்கலாம்.

குறுகிய காலத்தில் சினிமாவிற்குள் நுழைந்தாலும் ஒவ்வொரு படத்திலும் அசுர வளர்ச்சியடைந்து அதற்கான சம்பளத்தை பல மடங்காக பெருக்கிக் கொண்டு வருகிறார். அப்படி இவர் ஆரம்பத்தில் எடுத்த மாநகரம் பட முதல் கடைசியாக இவர் எடுக்கப்பட்ட லியோ படம் வரை கிட்டத்தட்ட 30 கோடி அளவிற்கு சம்பாதித்து இருக்கிறார்.

இன்னும் சொல்ல போனால் இவர் ஆரம்பத்தில் எடுத்த மாநகரம் மற்றும் கைதி படத்திற்கு லட்சத்தில் மட்டுமே சம்பளத்தை பெற்றார். அதன் பிறகு விஜய் நடிப்பில் இவர் இயக்கிய மாஸ்டர் படத்தின் மூலம் கோடி கணக்கில் வாங்கும் சம்பளத்திற்கு இவருடைய நிலைமையை உயர்த்திக் கொண்டார்.

Also read: மாஸ்டர்ல மிஸ்ஸான வில்லனை ரஜினிக்கு லாக் செய்த லோகேஷ்.. குருவுக்கு தண்ணி காட்ட வரும் சிஷ்யன்

அதன்பிறகு கமல் நடிப்பில் விக்ரம் படத்தை எடுத்த பொழுது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கிட்டத்தட்ட 500 கோடி அளவிற்கு வசூலை பெற்று பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது. இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம் 10 கோடி. அதன் பிறகு லியோ படத்தில் 18 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். இப்படி இவர் மொத்தமாக இயக்குனராக சம்பாதித்தது 30 கோடி.

அதன் பிறகு இவருக்கு கிடைத்த பேரும் புகழும் தொடர்ந்து சினிமாவில் இவருக்கான தகுதியை உயர்த்தியது. அப்படி இவர் பிரபலமானதால் அதற்காக பிராண்ட் அம்பாசிடர் என்கிற முறையில் 5 கோடி அளவில் சொத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அடுத்ததாக மற்ற வசதிகள் என்று கார் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் என 50லட்சத்திற்கும் மேலாக சேர்த்து வைத்திருக்கிறார்.

இப்படி இவருக்கு நாலா பக்கத்திலும் இருந்து பணமழை கொட்டுகிறது. அந்த வகையில் சினிமாவிற்குள் வந்ததிலிருந்து இப்போது வரை கிட்டத்தட்ட 35.6 கோடிக்கு மேல் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார். அடுத்ததாக தயாரிப்பிலும், ஹீரோவாகவும் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் இவருடைய மார்க்கெட் பல மடங்காக உயரப்போகிறது.

Also read: கூடவே இருந்து சோலியை முடித்த செவ்வாழை.. ஆணவ பேச்சால் உக்கிரமான கலாநிதி, பதட்டத்தில் லோகேஷ்

Trending News